Wednesday, January 29, 2020.
Home இந்தியா 5 பெண்களை மணந்தும் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

5 பெண்களை மணந்தும் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 5 பெண்களை திருமணம் செய்த நபர், தனது 3ஆவது மனைவியின் 5 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் 50 வயதான ஷான்பாஷா. இவர் கிடைக்கின்ற வேலைகளை செய்து அந்த பகுதியில் சுற்றிவந்தார்.

அவ்வப்போது பெண்களை காதல் வலையில் விழவைத்து, அவர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டு வாழ்க்கை கொடுப்பதாக கூறி இதுவரை 5 பெண்களை திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

3வது மனைவி வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில், அவரது 5 வயது பெண் குழந்தை, ஷான்பாஷாவின் தங்கை வீட்டில் வளர்ந்து வந்தாள். அந்த சிறுமியை இரவு நேரத்தில் மட்டும் தன்னுடன் அந்த குழந்தையை படுக்க வைத்துக்கொள்வதாக கூறி ஷான்பாஷா அழைத்து சென்றுவிடுவது வழக்கம்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நேரத்தில் குடிபோதையில் வீட்டிற்கு செல்லும் ஷான்பாஷா, தான் பெற்ற பிஞ்சு குழந்தை என்றும் பாராமல் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கியுள்ளான். இதனால் காயமடைந்த அந்த சிறுமி காலையில் தனது அத்தை வீட்டிற்கு சென்றபோது வலியால் துடித்து அழுதுள்ளது.

இதனை அறிந்த அவரது உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் திருப்பத்தூர் நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து ஷான்பாஷாவை பிடித்து விசாரித்த போது அவன், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவனை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

இதயும் பாருங்க...

கடைசி ஆசை: மௌனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள்!

பெப்ரவரி 1ஆம் திகதி நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் 4 பேரின் கடைசி ஆசை குறித்து திகார் சிறை கேட்டுள்ளது. நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான முகேஷ்...

யாழில் சிறுவனின் சடலம் மீட்பு

தொண்டமனாறு - செல்வச்சந்நிதி முருகன் கோவில் கேணியில் இருந்து, இன்று (28), சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவன், இதுவரை அடையாளங்காணப்படவில்லையென, வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இன்றுக் காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள், கேணியில்...

ஜானு: 96 ரசிகர்களுக்கு மீண்டும் இசை விருந்து

விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 96. பள்ளிப்பருவ காதலையும் நட்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திய இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரேம் குமார் இயக்கத்தில்...

மாணவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தல்

மாணவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தல் சீனாவின் உஹானில் உள்ள அனைத்து இலங்கை மாணவர்களையும் திரும்ப நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவவுறுத்தியுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும்...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...