Sri Lanka 24 Hours Online Breaking News

5.3 டன் பொருட்களுடன் புறப்பட்டது ஜப்பான் விண்கலம்

0

ஜப்பானில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு 5.3 டன் எடையுள்ள பொருட்கள், விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து, விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. இங்கு சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு தேவையான பொருட்கள் விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ‘கோனோட்டரி 8’ என்ற மிகப்பெரிய ஆளில்லா விண்கலம் மூலம் பொருட்களை அனுப்ப ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டது.

இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 11ஆம் திகதி தனேகாஷிமா தீவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்கலத்தை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்ற ஜப்பான் விண்கலம்

இந்நிலையில், பிரச்சினை சரிசெய்யப்பட்ட நிலையில், சர்வதேச விண்வெளி மையத்திற்கு இன்று ஆளில்லா விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.05 மணிக்கு எச்2பி ராக்கெட் மூலம் இந்த சரக்கு விண்கலம் ஏவப்பட்டுள்ளது.

இந்த விண்கலத்தில் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பேட்டரிகள், ஆய்வுக்கு தேவையான உபகரணங்கள் என 5.3 டன் எடையுள்ள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

Get real time updates directly on you device, subscribe now.

You might also like