நியூசிலாந்து டெஸ்ட்டில் 5 மெகா சாதனைகளை படைக்க போகும் தமிழக வீரர் அஸ்வின்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்து சாதனைகளை படைக்க  தமிழக வீரர் அஸ்வின் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து டெஸ்ட்டில் 5 மெகா சாதனைகளை படைக்க போகும் தமிழக வீரர் அஸ்வின்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்து சாதனைகளை படைக்க  தமிழக வீரர் அஸ்வின் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அஸ்வின் தற்போது 527 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் கும்ப்ளேவின் ரெக்கார்டை உடைக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகின்றது.

அத்துடன், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

கோலி, ரோகித் அதிரடி கோரிக்கை... முக்கிய விதியை நீக்கியது பிசிசிஐ!

அத்துடன், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அணில் கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் முறியடிப்பார். 

இதேபோன்று, இந்தத் தொடரில் அஸ்வின் 15 விக்கெட்டுகளை கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை செய்வார்.

அத்துடன்,  நியூசிலாந்துக்கு எதிராக அஸ்வின் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வார்னேவின் சாதனையை அஸ்வின் முறியடித்து, இரண்டாவது இடத்தை பிடிக்க முடியும்.

மேலும், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நாதன் லயனை பின்னுக்கு தள்ளி அஸ்வின் ஏழாவது இடத்துக்கு வந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp