அணியிலிருந்து நீக்கப்படும் முக்கிய வீரர்.. தொடக்க வீரராக ருதுராஜ்.. சென்னை அதிரடி!
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் 9ஆம் இடத்தில் இருக்கிறது.

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் 9ஆம் இடத்தில் இருக்கிறது.
எஞ்சி இருக்கும் 10 போட்டிகளில் சிஎஸ்கே அணி குறைந்தபட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியுடன் மோதும் ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சந்திகாரில் நடைபெறும் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி நிச்சயம் வெற்றி பெற வேண்டும். எனினும், ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணி பலமான அணியாக உள்ளது.
இந்த போட்டி சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சவாலாக காணப்படும் நிலையில் சிஎஸ்கே அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
பெரிய அளவு சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா தடுமாறி வருவதுடன், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ரவிந்திரா 65, ரன்கள் ஆர்சிபி அணிக்கு எதிராக 41 ரன்களும் ரச்சின் அடித்தார்.
ஆனால் அதன் பிறகு 0, 3 என ரச்சின் மோசமாக விளையாடி வருகிறார். ரச்சின் ரவீந்திரா ஸ்ட்ரைக் ரைட்டும் பெரிய அளவு இல்லை. இதனால் ரச்சினை அணியை விட்டு நீக்க வாய்ப்பு இருக்கிறது.
எனினும் அவர் இம்பேக்ட் வீரராக மூன்றாவது இடத்தில் விளையாடலாம் என்றும் கூறப்படுவதுடன், கேப்டன் ருதுராஜ் தொடக்க வீரராக விளையாட உள்ளார். இதன் மூலம் ருதுராஜ், கான்வே மீண்டும் ஆரம்ப ஜோடியாக விளையாடுவார்கள்.
ஒருவேளை, ரச்சின் இல்லை என்றால் அவருக்கு பதில் ஜிம்மி ஓவர்டன் பிளேயிங் லெவனுக்குள் வரலாம். அவ்வாறு இல்லையென்றால் ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லிஸ்க்கு வாய்ப்பு வழங்கப்படும்.
இதேவேளை, பேட்டிங்கில் தான் சிஎஸ்கே அணி கடுமையாக தடுமாறி வருகிறது என்பதால், சிஎஸ்கே அணியில் இருக்கும் சீனியர் வீரர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்கள் சாயிக் ரசித் மற்றும் வான்ஸ் பேடி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.