147 ஆண்டுக்கால வரலாற்றில்... ஒரே நாளில் இந்திய அணி படைத்த  5 சாதனைகள்..  கெத்து காட்டிய ரோஹித் படை!

147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரே நாளில் 5 சாதனைகளை படைத்திருக்கிறது. 

147 ஆண்டுக்கால வரலாற்றில்... ஒரே நாளில் இந்திய அணி படைத்த  5 சாதனைகள்..  கெத்து காட்டிய ரோஹித் படை!

147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரே நாளில் 5 சாதனைகளை படைத்திருக்கிறது. 

தற்போது நடைபெறும் 9 டெஸ்ட் போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தகுதி பெற்று விடும். இதில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் சொந்த மண்ணில் நடைபெறுகிறது.

அடுத்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறுகிறது. இதனால் இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் வென்றால் கூட இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும். 

இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு நாள் மழையால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் எஞ்சி இருக்கும் நான்காவது நாள் மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்த முயற்சி செய்து வருகிறது. 

வங்கதேச அணி முதலில் 233 ரன்கள் எடுக்க இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் அதிரடியாக விளையாடியது. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோர் டி20 கிரிக்கெட் விளையாடியது போல் ரன்களை சேர்த்து வந்தனர். இந்திய அணி 19 பந்துகளில் எல்லாம் அரை சதம் அடித்து அசத்தியது.

இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே அதிவேகமாக அடிக்கப்பட்ட அரை சதம் ஆகும். இதே போன்று ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். 

இதன் மூலம் இந்திய அணி 10.1வது ஓவரில் 100 ரன்கள் எட்டி அசத்தியது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணி அதிவேகமாக 100 ரன்கள் அடித்தது முதல் முறையாகும். 

இந்தியா தொடர்ந்து அதிரடி காட்டியதால் 18 புள்ளி இரண்டாவது ஓவரில் 150 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டியது. இதிலும் இந்திய அணி அதிவேகமாக 150 ரன்களை எட்டி சாதனை படைத்தது. அது மட்டுமில்லாமல் 24.2 ஓவர்கள் எல்லாம் இந்திய அணி 200 ரன்கள் எடுத்தது. 

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி அதிவேகமாக 200 ரன்கள் அடித்தது இதுவே முதல் முறையாகும். இதேபோன்று 30.3 ஓவர்களில் இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது. 

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 50, 100, 150 ,200 ,250 ஆகிய ரன்களை அதிவேகமாக எட்டிய முதல் அணி என்ற பெருமையை இந்தியா படைத்தமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp