எந்த படமா இருந்தாலும் என் இசை தரமா இருக்கும்! அனிருத் அதிரடி!

பேட்டி ஒன்றில் தான் 500 கோடி வசூல் செய்யும் படங்களுக்கு இசையமைப்பது போல தான் 1 கோடி படத்திற்கும் இசையமைப்பேன் என்று கூறியுள்ளார். 

எந்த படமா இருந்தாலும் என் இசை தரமா இருக்கும்! அனிருத் அதிரடி!

அனிருத் இசையமைக்கும் படங்கள் என்றாலே வெற்றிபெற்று விடுகிறது. 

இவருடைய இசையில் கடைசியாக வெளியான ஷாருக்கான் நடித்த ஜவான் படம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. 

அடுத்ததாக லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையில், பேட்டி ஒன்றில் தான் 500 கோடி வசூல் செய்யும் படங்களுக்கு இசையமைப்பது போல தான் 1 கோடி படத்திற்கும் இசையமைப்பேன் என்று கூறியுள்ளார். 

இது குறித்து பேசிய அவர் ”எனக்கு பல ஹிட் பாடல்கள் சிறிய பட்ஜெட் படங்களில் இருந்து தான் வந்துள்ளது. நான் பெரிய படங்களுக்கு இசையமைக்கும் போது மட்டும் மிகவும் முயற்சி செய்வேன் என்று இல்லை. எல்லா படத்திற்கும் நான் ஒரே மாதிரி தான் இசையமைத்து வருகிறேன். 

குறிப்பாக நான் சிறிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்கும் போது ஒரு அழுத்தம் இல்லாமல் வேலை செய்வேன். புதிதாக எதாவது முயற்சி செய்வேன் ” எனவும் அனிருத்  தெரிவித்துள்ளார். 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp