நியூசிலாந்து

இங்கிலாந்து துடுப்பாட்டத்தின் போது, 50வது ஓவரில் நிகழ்ந்த ஒரு துரதிருஷ்டவசமான சம்பவமே, நியூசிலாந்தின் ஒட்டு மொத்த சாம்பியன் கனவுக்கு வேட்டு வைத்திருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து 242 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கியது இங்கிலாந்து.

அந்த அணிக்கு நியூசிலாந்து வீரர்கள் தங்களது துல்லிய மற்றும் நேர்த்தியான பந்துவீச்சு மூலம் கடும் நெருக்கடி கொடுத்தனர். கடைசி ஒரு ஒவருக்கு 15 ஓட்டங்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. அந்த ஓவரின் முதல் 2 பந்துகளை அபாரமாக வீசி ஓட்டங்கள் கொடுக்காமல் கட்டுப்படுத்தினார் போல்ட்.

3வது பந்தில் ஸ்டோக்ஸ் சிக்சர் தூக்க, கடைசி 3 பந்தில் 9 ஓட்டங்கள் தேவை என்றானது. அந்த பந்தில் ஸ்டோக்ஸ் 2 ஓட்டங்கள் அடித்தார். 2வது ஓட்டங்கள் ஓடி முடிக்கும் போது குப்தில் வீசிய த்ரோவில் பந்து நேராக வந்து ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது.

ஸ்டோக்ஸ் வேண்டுமென்றே பந்தை தடுக்காத காரணத்தால் அவர்கள் ஓடிய 2 ஓட்டங்கள் அந்த எதிர்பாராத பவுண்டரியையும் சேர்த்து 6 ஓட்டங்கள் வழங்கப்பட்டன. கடைசி 2 பந்தில் 3 ஓட்டங்கள் தேவைப்பட, ஆட்டம் டையில் முடிந்தது.

இதனையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15 ஓட்டங்கள் எடுத்தது. 16 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து, 15 ஓட்டங்கள் எடுத்ததால் சூப்பர் ஓவரின் விதிமுறைப் படி அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் கிரிக்கெட்டை உலகிற்கே அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அணி முதன்முறையாக உலக கோப்பையை இந்த முறை வென்று அசத்தியுள்ளது. இந்த வெற்றியை அந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.