17ஆம் திகதியில் இருந்து 4 தினங்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

45
மதுபானசாலைகளுக்கு பூட்டு
colombotamil.lk

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 17ஆம் திகதியில் இருந்து நான்கு தினங்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

17 ஆம் திகதி அதாடக்கம் 20 ஆம் திகதி வரையிலான இந்த காலப்பகுதியில் மதுபானம் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் கண்டறிய ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஊடக பேச்சாளரும் கலால் திணைக்களத்தின் பிரதி ஆணையாளருமான கபிலகுமாரசிறி தெரிவித்தார்.