பெண்களை பார்த்தாலே பயப்படும் நபர்.. 55 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடக்கம்!
ரூவாண்டாவை சேர்ந்த கேலிட்ஸி நிசாம்வித்தா என்ற 71 வயது நபருக்கு பெண்களை பார்த்தாலே பயம் வரும் வித்தியாசமான பாதிப்பு உள்ளதாம்.
ரூவாண்டாவை சேர்ந்த கேலிட்ஸி நிசாம்வித்தா என்ற 71 வயது நபருக்கு பெண்களை பார்த்தாலே பயம் வரும் வித்தியாசமான பாதிப்பு உள்ளதாம்.
இதற்காக தன்னை வீட்டிற்குள்ளேயே 55 ஆண்டுகளாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் பெண்களை பார்க்க கூடாது என்பதற்காக தன்னுடைய வீட்டை சுற்றி 15 அடி சுவர் ஒன்றை எழுப்பியுள்ளார்.
பெண்களை பார்த்தாலோ அல்லது அவர்களை பற்றி நினைத்தாலோ பயம் ஏற்படும் உணர்வுகளை கைனோபோபியா என்று மருத்துவ ரீதியாக அழைக்கப்படுகிறது.
இனி ஒன்றல்ல... இரண்டு... வாட்ஸ் அப் பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
இத்தகைய பய உணர்வின் மூலம் நெஞ்சில் ஒருவித படபடப்பு, அதிகப்படியான வியர்த்தல், இதய இறுக்கம், மூச்சுத் திணறல் போன்ற சிரமங்கள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கேலிட்ஸி நிசாம்வித்தா சிறு வயது முதலே பெண்களை பார்ப்பதை தவிர்த்து வந்தாலும், அப்பகுதி பெண்கள் தொடர்ந்து அவருக்கு உதவி வருகின்றனர்.
அப்பகுதி மக்கள் அவருக்கு தேவையான பொருட்களை வெளியிலிருந்து வீட்டிற்குள் வீசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.