சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு சற்று முன்னர் வெளியானது 

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு : பரீட்சை பெறுபேறுகளை  www.doenets.lk என்ற இணைப்பினூடாக பெற்றுக்கொள்ளலாம்.

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு சற்று முன்னர் வெளியானது 

2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.  

குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும்  www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை மே 29 ஆம் திகதி 3,568  பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

அவர்களில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp