இந்திய அணியில் இன்று வரவுள்ள அதிரடி மாற்றம்.. அணிக்குள் வரும் மூன்று நட்சத்திரங்கள்... மாஸ்டர் பிளான்!

தென்னாப்பிரிக்காவிடம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி டி20 தொடரில் தோற்காத நிலையில், இந்த தொடரை சமன் செய்ய இந்திய அணி இன்றைய கடைசி டி20 போட்டி வெற்றி பெறவேண்டும்.

இந்திய அணியில் இன்று வரவுள்ள அதிரடி மாற்றம்.. அணிக்குள் வரும் மூன்று நட்சத்திரங்கள்... மாஸ்டர் பிளான்!

இந்தியா மற்றம் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது t20 போட்டி ஜோனஸ்பர்க் நகரில் இன்று இரவு நடக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவிடம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி டி20 தொடரில் தோற்காத நிலையில், இந்த தொடரை சமன் செய்ய இந்திய அணி இன்றைய கடைசி டி20 போட்டி வெற்றி பெறவேண்டும்.

இதற்காக இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் பல மாற்றங்களை செய்ய உள்ளது. இந்திய அணியின் இரண்டு தொடக்க வீரர்களுமே டக்அவுட் ஆகி வெளியேறியது தான் இரண்டாவது  டி20 போட்டியில் இந்திய அணி தோற்றத்துக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகின்றது.

இதனால் கடைசி ஆட்டத்தில் கில்லுக்கு பதிலாக சிஎஸ்கே வீரர் ருதுராஜ் அணிக்கு திரும்ப அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதேபோன்று கடந்த டி20 தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி டி20 போட்டியில் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறது. 

மற்றபடி பேட்டிங் வரிசையில் எந்த மாற்றமும் இருக்காது எனினும் பந்துவீச்சை பொறுத்தவரை இந்தியாவுக்கு சில சிக்கல்கள் உள்ளது.

தீபக்சாகர் தற்போது இல்லாததால் இந்திய அணி அதே மூன்று வீரர்களை வைத்து களமிறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் டி20 தரவரிசையில் உலகின் முதல் நிலை வீரரான ரவி பிஸ்னாய், குல்தீப் யாதவுக்கு பதில் இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp