ஆஸ்திரேலியா தொடருடன் 4 வீரர்களுக்கு ஆப்பு... பிசிசிஐ அதிரடி தீர்மானம்!
பிசிசிஐ தரப்பில் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சொந்த மண்ணிலேயே முதல்முறையாக ஒயிட் வாஷ் செய்யப்பட்டுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெறவில்லை என்றால், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரே 4 சீனியர் வீரர்களுக்கும் கடைசி தொடராக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான மோசமான தோல்விக்கு இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் மோசமான செயற்பாடே காரணம் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
92 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.... கம்பீர் வேண்டாம்.. அப்போதே சொன்ன ரோஹித்... யார் கேட்டாங்க!
இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெல்ல வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. இல்லையொன்றால், இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது.
இதேவேளை, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் தான் தமது கவனம் உள்ளதாகவும், ஆஸ்திரேலியா தொடருக்கு பின்னர் என்ன நடக்கும் என்பதில் கவனம் செலுத்தப் போவதில்லை என்று ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார்.
அத்துடன், இது தொடர்பில் பிசிசிஐ தரப்பில் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்போது, நியூசிலாந்து டெஸ்ட் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டாலும், நவம்பவர் 10ஆம் திகதி இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளதால், எந்த உடனடி நடவடிக்கையும் இருக்காது என்று பார்க்கப்படுகின்றது.
ஒருவேளை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை இழந்து இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட முடியவில்லை என்றால், 4 சீனியர் வீரர்களும் விளையாடும் கடைசி டெஸ்ட் தொடர் அதுவாகவே இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு நிச்சயம் 4 சீனியர்களில் 2 அல்லது 3 வீரர்கள் பயணிக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோர் 38 வயதை எட்டியுள்ளனர்.
அத்துடன், விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் உடற்தகுதியுடன் இருந்தாலும், அவர்கள் விளையாடுவதை வைத்தே வாய்ப்பு அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
ரோஹித் சர்மாவின் இடத்தில் விளையாட அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் தயாராக உள்ளதுடன், அஸ்வின் இடத்தில் விளையாட வாஷிங்டன் சுந்தர் தயாராகி உள்ளார். அத்துடன், ஜடேஜாவுக்காக சிறந்த மாற்று வீரராக அக்சர் படேல் தயாராகியுள்ளார்.
அதேபோல், அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இளம் வீரர்களை கொண்டு பயணிக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதால், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் 4 சீனியர் வீரர்களுக்கும் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.