கம்பீர் வைத்த இரண்டு கோரிக்கை... மறுப்பு தெரிவித்த ரோஹித், அஜித் அகர்கர்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் மதியம் 2:30 மணிக்குத்தான் அறிவிக்கப்பட்டது.
அணி தேர்வின்போது பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளை தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.
ஜனவரி 18 அன்று மதியம் 12.30 க்கு துவங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணி தேர்வு கூட்டம் ஆரம்பமானதும் அணி அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் மதியம் 2:30 மணிக்குத்தான் அறிவிக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரமாக கம்பீர், அஜித் அகர்கர் மற்றும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
துணை கேப்டனாக யாரை நியமிப்பது என்பது பற்றி நீண்ட விவாதம் நடந்துள்ளதுடன், சில மாதங்களுக்கு முன்பு பும்ராவை துணை கேப்டனாக அறிவிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டாலும், தற்போது அவர் காயத்தில் இருப்பதால் விளையாடுவது இன்றும் உறுதியாகவில்லை.
இந்த நிலையில், யாரை துணை கேப்டனாக அஜித் அகர்கர் மற்றும் ரோஹித் சர்மா சுப்மன் கில் பெயரை முன் மொழிந்த நிலையில், அதை கவுதம் கம்பீர் ஏற்க மறுத்து ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
ஆனால், அஜித் அகர்கர் மற்றும் ரோஹித் சர்மா அதை மறுத்து விட்டதுடன், மாற்று விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய வேண்டும் என கவுதம் கம்பீர் கேட்டு இருக்கிறார்.
ஆனால், ரிஷப் பண்ட் தான் சரியான தேர்வாக இருப்பார் என அஜித் அகர்கர் திட்டவட்டமாக கூற விவாதம் ஏற்பட்டு அணி அறிவிப்பு தாமதமானதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போதும் புஜாராவை அணியில் சேர்க்க வேண்டும் என கவுதம் கம்பீர் கேட்டதாகவும், அதை அஜித் அகர்கர் மறுத்து விட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போதும் கவுதம் கம்பீரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.