கேலி செய்த விக்கெட் கீப்பர்.. கொதித்தெழுந்த பாபர் அசாம்... அப்புறம் நடந்ததுதான சம்பவமே!

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் ராங்பூர் ரைடர்ஸ் மற்றும் துரண்டோ டாக்கா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. 

கேலி செய்த விக்கெட் கீப்பர்.. கொதித்தெழுந்த பாபர் அசாம்... அப்புறம் நடந்ததுதான சம்பவமே!

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் ராங்பூர் ரைடர்ஸ் மற்றும் துரண்டோ டாக்கா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. 

டாஸ் வென்ற துரண்டோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக பிராண்டின் கிங் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் தொடக்க வீரராக களம் இறங்கினர். 

அப்போதுஈ பாபர் அசாம் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி  31 பந்துகளில் 37 ரன்கள் அவர் சேர்த்தார். இந்த நிலையில், எதிரணியின் விக்கெட் கீப்பர் இர்பான் சுக்குர், பாபர் அசாமிடம் வம்பிழுத்தார்.

இது ஒன்றும் டெஸ்ட் மேட்ச் கிடையாது, டி20 போட்டி என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள் என்று கூற, கடுப்பான பாபர் அசாம், கோபமாக திட்டினார். இதனை அடுத்து நடுவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.

இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆபத்து... இது நடந்தால் இங்கிலாந்துக்கு தான் வெற்றி... இப்படி ஒரு திருப்பமா?

அதன் பிறகு அதிரடி காட்டிய பாபர் அசாம்  5 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்க 46 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். 

இறுதியில் ராங்க்பூர் ரைடர்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. இதனை எடுத்து களம் இறங்கிய துராண்டோ டாக்கா அணியில் வீரர்கள் சோபிக்கத் தவறியதால் அந்த அணி 104 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

வழமையாக களத்தில் அமைதியாக நடந்து கொள்ளும் பாபர் அசாம், தன்னை கேலி செய்ததால், கோபத்தில் உச்சத்திற்கு சென்று தன்னுடைய பேட்டிங்கில் பதிலடி கொடுத்துள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp