டி20 உலக கிண்ண இந்திய அணியில் இருந்து கோலி நீக்கம்? ஆதரவாக களமிறங்கிய ஜாம்பவான்கள்!
இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை கைப்பற்றியது.
டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் ஆரம்பத்தில் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக மே 25ஆம் தேதிக்குள் ஐபிஎல் தொடரை முடித்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இறுதியாக, இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை கைப்பற்றியது.
14 மாதங்களுக்க பின்னர் இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா, விராட் கோலி அழைக்கப்பட்டதன் மூலம் இவர்கள் இருவரும் அடுத்து நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென விராட் கோலி இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இருந்து நீக்க இருப்பதாகவும், அவர் டி20 உலக கோப்பையில் விளையாட மாட்டார் என்றும் செய்தி பரவி வருகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் மற்றும் இந்திய லெஜெண்ட் அனில் கும்ப்ளே இருவரும் விராட் கோலியின் டி20 கிரிக்கெட் பேட்டிங் குறித்து தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.
இயான் மோர்கன் கூறும்பொழுது “மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த வீரராக விராட் கோலியை மிகவும் மதிக்கிறேன். கடந்த காலங்களில் அவர் போட்டியில் கொண்டு வந்த உத்வேகம் மற்றும் தீவிரம் அணியில் எல்லோரையும் உயர்த்தக்கூடியது” என்று கூறியிருக்கிறார்.
அனில் கும்ப்ளே “நான் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் ஒரு பகுதியாக இருந்த பொழுது விராட் கோலியை நான் பார்த்திருக்கிறேன். அண்டர் 19 உலகக் கோப்பையை வென்றதிலிருந்து அவர் இந்திய அணிக்குவிரும்பிய வகையில் செயல்படுவதற்கு, உடல் தகுதியில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு மிகவும் அருமையானது. டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர் சீராக ரன்கள் குவித்த விதம் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பானது” என்று கூறி இருக்கிறார்.