இந்திய அணி தோல்விக்கு இதுதான் காரணம் - கவுதம் கம்பீர் மீது கடுப்பில் பிசிசிஐ.. காரணம் இதுதான்!

கவுதம் கம்பீர் செய்த ஒரு செயல் தான் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு காரணம் என பிசிசிஐ அதிகாரிகள் அவர் மீது கடுப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணி தோல்விக்கு இதுதான் காரணம் - கவுதம் கம்பீர் மீது கடுப்பில் பிசிசிஐ.. காரணம் இதுதான்!

கவுதம் கம்பீர் செய்த ஒரு செயல் தான் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு காரணம் என பிசிசிஐ அதிகாரிகள் அவர் மீது கடுப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கான பிட்ச்சை தயார் செய்வதில் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்  தனி கவனம் செலுத்தி வந்ததுடன், எப்போதும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களை தயார் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். 

சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களை எதிரணிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதை உணர்ந்ததால் அது தொடர்பில் டிராவிட்  அவதானமாக இருந்தார்.

அதாவது, இந்திய மண்ணில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிற்கும் சமமான பிட்ச்களில் இந்திய அணி ஆடுவதை ராகுல் டிராவிட் உறுதி செய்து இருந்தார்.

அத்துடன், கவுதம் கம்பீர் தலைமையில் இந்தியா விளையாடிய முதல் டெஸ்ட் தொடரான வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இதே நடைமுறைதான் கடைபிடிக்கப்பட்டது. 

மேலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடந்த பெங்களூருவிலும் அதுபோன்ற பிட்ச் தான் தயாரிக்கப்பட்டு இருந்தது. 

ஆனால், முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த பின்னர் புனே மற்றும் மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டிகளுக்கு முதல் நாளிலிருந்து சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் பிட்ச்களை தயார் செய்ய வேண்டும் என கவுதம் கம்பீர் மற்றும் துணை பயிற்சியாளர்கள் தீர்மானித்ததாக கூறப்படுகிறது.

அதில் இந்திய அணி நிர்வாகத்தில் சிலருக்கு ஒப்புதல் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. அதை மீறி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். 

அதை பயன்படுத்தி நியூசிலாந்து சுழற் பந்துவீச்சாளர்கள் அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வீழ்த்தினர். இதை அடுத்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்சை தயார் செய்ய சொன்னது ஏன் என பிசிசிஐ அதிகாரிகள் பயிற்சியாளர்கள் குழுவிடம் விளக்கம் கேட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp