தடுமாறிய டெல்லி அணி.. போட்டியை தலைக் கீழ் மாறிய வீரர்... பரபரப்பான நொடிகள்! திரில் வெற்றி!

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரர் மார்க்கரம் 15 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

தடுமாறிய டெல்லி அணி.. போட்டியை தலைக் கீழ் மாறிய வீரர்... பரபரப்பான நொடிகள்! திரில் வெற்றி!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரர் மார்க்கரம் 15 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

எனினும், இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ், பூரான் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர். மிச்சல் மார்ஸ் 36 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். நிக்கோலஸ் பூரான் 30 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். 

டேவிட் மில்லர் 19 பந்துகளில் 27 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழந்து 209 ரன்கள் குவித்தது.

டெல்லி  தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த நிலையில், டெல்லி அணி 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. 

தொடக்க வீரராக விளையாடிய ஜேக் பிரேசர் ஒரு ரன்னிலும் அபிஷேக் போரெல் டக்அவுட் ஆகவும் சமீர் ரிஷி நான்கு ரன்களிலும் ஆட்டம் இழந்த நிலையில், டெல்லி அணி ஏழு ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இதனை அடுத்து டுபிளசிஸ் மற்றும் கேப்டன் அக்சர் பட்டேல் ஆகியோர் பொறுப்பாக விளையாடிய ரன்களை சேர்த்ததுடன்,  அதிரடி காட்டத் தொடங்கிய அக்சர் பட்டேல் 11 பந்துகளில் 22 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

அத்துடன், டுபிளசிஸ் 29 ரன்களில் வெளியேற டெல்லி அணி 113 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதுடன், டெல்லி அணியின் தோல்வி உறுதி என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய ஆஸ்டோஷ் சர்மா அதிரடி காட்ட இவருக்கு விபராஜ் நிகம் கரம் கொடுக்க, இந்த ஜோடி லக்னோவின் பந்துவீச்சை பதம்பார்த்தனர்.

இதனால் லக்னோ அணியின் ரக்கள் உயர்ந்து கடைசி மூன்று ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆஸ்டோஸ் சர்மா இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி என 18 ரன்களை எடுத்தார்.

இதையும் படியுங்கள்: ஏமாற்றி வென்றதா சென்னை அணி?  பந்தை சேதப்படுத்தியதாக புகார்.. உண்மை இதோ!

இதனால் இலக்கு 12 பந்துகளுக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19 வது ஓவரில் இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் என அடிக்க கடைசி ஓவரில் வெறும் ஆறு ரன்கள் தான் தேவைப்பட்டது.

இதில் மூன்றாவது பந்தில் ஆஸ்டோஷ் சர்மா சிக்சர் அடிக்க டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று அதிர்ச்சி கொடுத்துள்ளது.