அஸ்வனி குமார் படைத்த பவுலிங் சாதனை... மாபெரும் வரலாறு.. 16 வருட சாதனை சமன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களான ரஹானே, ரிங்கு சிங், மனீஷ் பாண்டே மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகியோரது விக்கெட்டுகளை அஸ்வனி குமார் வீழ்த்தினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷதாப் ஜகாட்டி சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் ஐபிஎல் பந்துவீச்சின் போது 24 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
அதன் பின் பல வெளிநாட்டு வீரர்கள் தங்கள் அறிமுகத்தில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தனர். ஆனால், ஷதாப் ஜகாட்டிக்கு இணையாக எந்த ஒரு இந்திய பந்துவீச்சாளரும் சிறந்த அறிமுக பந்துவீச்சை பதிவு செய்யவில்லை.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் 23 வயதான வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார் தனது ஐபிஎல் அறிமுகத்தில் நான்கு ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அதை சமன் செய்து இருக்கிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களான ரஹானே, ரிங்கு சிங், மனீஷ் பாண்டே மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகியோரது விக்கெட்டுகளை அஸ்வனி குமார் வீழ்த்தினார்.
அத்துடன், ஐபிஎல் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக தனது அறிமுக போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பந்துவீச்சாளர்களில் நான்காவது இடத்தை பிடித்து உள்ளார்.
ஐபிஎல் அறிமுகப் போட்டியில் சிறந்த பந்துவீச்சு
6/12 - அல்சாரி ஜோசப் (MI) vs SRH, 2019
5/17 - ஆண்ட்ரூ டை (GL) vs RPS, 2017
4/11 - ஷோயப் அக்தர் (KKR) vs DD, 2008
4/24 - அஸ்வனி குமார் (MI) vs KKR, 2025*
4/26 - கெவோன் கூப்பர் (RR) vs KXIP, 2012
4/33 - டேவிட் வைஸ் (RCB) vs MI, 2015
ஐபிஎல் அறிமுகத்தில் சிறந்த பந்துவீச்சு (இந்திய வீரர்கள்)
4/24 - ஷதாப் ஜகாட்டி (CSK) vs DD, 2009
4/24 - அஸ்வனி குமார் (MI) vs KKR, 2025*
4/29 - பால் வால்தாட்டி (KXIP) vs டெக்கான் சார்ஜர்ஸ், 2011