முதலிடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்தார் அஸ்வின்! மாபெரும் ரெக்காட்!

முதல் இன்னிங்ஸில் முதல் மூன்று விக்கெட்களை வீழ்த்திய அஸ்வின், அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.

முதலிடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்தார் அஸ்வின்! மாபெரும் ரெக்காட்!

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான  இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதல் மூன்று விக்கெட்களை வீழ்த்திய அஸ்வின், அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.

முன்னதாக, ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோன் டெஸ்ட் போட்டிகளில் 530 விக்கெட்களை வீழ்த்தி இருந்த நிலையில், 531 விக்கெட்களுடன் அந்த சாதனையை அஸ்வின் உடைத்து உள்ளார்.

இதனையடுத்து,  ஒட்டுமொத்த டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்து உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்து உள்ளார்.

புனே டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 189 விக்கெட்கள் வீழ்த்தியதுடன், அதிலும், நாதன் லியோனை முந்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தை பிடித்து உள்ளார்.

2019 ஆம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருவதுடன்,  இதுவரை இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்கள் முடிவடைந்துள்ளன.

இந்த நிலையில், தற்போது மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருவதுடன்,  ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன் 43 போட்டிகளில் 78 இன்னிங்ஸ்களில் பந்து வீசி 187 விக்கெட்களை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக இருந்தார். 

லியோனை விட குறைந்த போட்டிகளிலேயே ஆடிய அஸ்வின்,  இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகின்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 39 போட்டிகளில் 74 இன்னிங்ஸ்களில் விளையாடி 189 விக்கெட்களை அஸ்வின் வீழ்த்தி உள்ளதுடன், நாதன் லியோனை விட 417 ஓவர்கள் குறைவாக வீசி இருப்பதுடன், அவரைவிட ஒரு விக்கெட் அதிகமாக வீழ்த்தி இருக்கிறார்.

அஸ்வின் அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பெறவுள்ளதால் மேலும் விக்கட்டுக்களை வீழ்த்தும் வாய்ப்பினை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...