அஸ்வின் ஓய்வால் ஏமாற்றமடைந்த அனில் கும்ப்ளே! நடந்தது என்ன? 

ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு தனது ஓய்வினை ரவிசந்திரன் அஸ்வின் அறிவித்தார்.

அஸ்வின் ஓய்வால் ஏமாற்றமடைந்த அனில் கும்ப்ளே! நடந்தது என்ன? 

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். 

ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு தனது ஓய்வினை ரவிசந்திரன் அஸ்வின் அறிவித்தார்.

இந்திய அணிக்காக மொத்தம் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரவிசந்திரன் அஸ்வின் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேசப் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். 

அத்துடன், சர்வதேச வீரர்கள் பட்டியலில் 7 ஆவது இடத்திலும் உள்ளதுடன், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் பட்டியலில் முதலிடத்தில் சுழற்பந்துவீச்சாளர் அணில்கும்பளே 619 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

இந்தநிலையில், அந்த சாதனையை முறியடிக்க அஸ்வினுக்கு 82 விக்கெட்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அந்த சாதனையை முறியடித்துவிட்டு தான் ஓய்வு பெறுவார் என பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், திடீரென அஸ்வின் ஓய்வை அறிவித்ததால் அனில் கும்ப்ளேவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். “அஸ்வின் பயணம் சாதாரணமானது அல்ல 700 க்கும் மேற்பட்ட சர்வதேச விக்கெட்டுகள் வீழ்த்திய சிறந்த வீரர் அவர். என்னுடைய சாதனையை அவர் முறியடித்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால், திடீரென அதிர்ச்சியான முடிவை அறிவித்திருக்கிறார்.

உங்கள் வாழ்க்கையை இன்று சர்வதேச அளவில் முடித்துக் கொண்டதில் நான் சற்று ஏமாற்றமடைந்தேன். அவருடைய அடுத்தகட்ட வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள், மேலும் அவர் களத்திற்கு வெளியே இன்னும் பிரகாசமான எதிர்காலம் அவருக்காக காத்திருக்கிறது” என அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp