பும்ராவின் நம்பர் 1 இடத்துக்கு ஆப்பு வைச்ச அஸ்வின்.. டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் யாருக்கு தெரியுமா?
ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்கள் வீழ்த்தி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார் அஸ்வின்.
நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் 26 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார்.
அத்துடன், ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்கள் வீழ்த்தி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார் அஸ்வின்.
முன்னதாக இரண்டாவது போட்டியின் முடிவில் பும்ரா டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து இருந்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ரா 4 போட்டிகளில் மட்டுமே ஆடி 19 விக்கெட்கள் வீழ்த்தினார்.
அஸ்வின் 870 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், பும்ரா 847 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், ஆஸ்திரேலியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் இதே இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 788 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறார்.
நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். 751 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா ஆறாம் இடத்தை பிடித்து இருக்கிறார்.
712 ரன்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 740 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
அஸ்வின் - 870 புள்ளிகள், ஜோஷ் ஹேசல்வுட் - 847, ஜஸ்பிரிட் பும்ரா - 847, ககிசோ ரபாடா - 834 புள்ளிகள், பாட் கம்மின்ஸ் - 820 புள்ளிகள், நாதன் லியோன் - 801 புள்ளிகள், ரவீந்திர ஜடேஜா 878 புள்ளிகள், பிரபாத் ஜெயசூர்யா - 783 புள்ளிகள், ஜேம்ஸ் ஆண்டர்சன் - 739 புள்ளிகள், ஷஹீன் அப்ரிடி - 733 புள்ளிகள் பெற்று உள்ளனர்.