தோனியை விட கிரேட்... ரோஹித் சர்மாவுக்காக உயிரைக் கூட விடலாம்.. சொன்னது யார் தெரியுமா?

தோனியை விட ரோஹித் சர்மா 10 அடி முன்னே வந்து வீரர்களை ஆதரிக்கிறார் என இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் அஸ்வின் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

தோனியை விட கிரேட்... ரோஹித் சர்மாவுக்காக உயிரைக் கூட விடலாம்.. சொன்னது யார் தெரியுமா?

தோனியை விட ரோஹித் சர்மா 10 அடி முன்னே வந்து வீரர்களை ஆதரிக்கிறார் என இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் அஸ்வின் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து  மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அஸ்வினின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்போது, அஸ்வினுக்கு துணையாக கேப்டன் ரோஹித் சர்மா உதவிகளை செய்தார்.

அது குறித்து பேசிய அஸ்வின், நான் கேப்டனாக இருந்தால், ஒரு வீரருக்கு இப்படி நடந்தால் நானும் நிச்சயம் அந்த வீரரை வீட்டுக்கு செல்ல அனுமதித்து இருப்பேன். 
ஆனால், அவருடன் ஒருவரை அனுப்பி வைப்பது இதெல்லாம் நம்பவே முடியவில்லை. ரோஹித் சர்மாவிடம் நான் ஒரு தலைசிறந்த தலைவரை நான் பார்க்கிறேன். என அஸ்வின் கூறியுள்ளார்.

பல கேப்டன்களுக்கு கீழ் விளையாடி இருக்கும் நிலையில், ரோஹித் சர்மாவிடம் என்னவோ உள்ளது. கடவுள் அவருக்கு இன்னும் பெரிதாக ஏதாவது கொடுப்பார் என நான் நம்புகிறேன். இந்த சுயநலமான உலகத்தில் இப்படி ஒருவரை பார்ப்பது அரிது என அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

கதறவிட்ட சிஎஸ்கே... ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் இடம்... தோனியின் மாஸ்டர்பிளான்!

தோனியும் அதை செய்து இருந்தால், ரோஹித் சர்மா அவரை விட 10 அடி முன்னே சென்று உள்ளார். இப்படி பட்ட ரோஹித்துக்காக களத்தில் ஒரு வீரர் உயிரை விடவும் தயங்க மாட்டார் என்று அஸ்வின் புகழந்துள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp