டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது... ரோஹித் அதிரடி... ஸ்தம்பித்து நிக்கும் பிசிசிஐ!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்ற இந்திய அணி, 2012க்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து சொதப்பியது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்ற இந்திய அணி, 2012க்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து சொதப்பியது.
இந்த நிலையில், இந்திய அணியானது அடுத்து, நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 டெஸ்ட்கள் என அடுத்த 6 டெஸ்ட் போட்டிகளில், 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.
6-ல் 4 வெற்றிகளை பெறாமல் அதற்கும் குறைவான வெற்றிகளை பெற்றால், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்துதான் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். இதனால், அடுத்து வரும் 6 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணிக்கு மிகமுக்கியமானதாக உள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் அல்லது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியுடன் சொந்த காரணங்களால் ரோஹித் சர்மா பயணிக்க மாட்டார் என்றும், இரண்டாவது அல்லது மூன்றாவது டெஸ்ட் துவங்குவதற்கு முன்புதான், அவர் இந்திய அணியில் இணைவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மிகமுக்கியம் என்பதால், முதல் போட்டியில் இருந்து நீங்கள் விளையாட வேண்டும் என ரோஹித் சர்மாவிடம், பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து, தான் வீட்டிற்கு சென்றுவிட்டு, முடிவை தெரிவிக்கிறேன் எனக் கூறிவிட்டு, 2ஆவது டெஸ்ட் முடிந்தப் பிறகு ரோஹித் தெரிவித்திருக்கிறார்.
தற்போது ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் தங்களது வீட்டிற்கு சென்று ஓய்வில் இருகிகறார்கள். நாளை மறுநாள் இந்திய அணியில் இணைய உள்ளனர்.
இந்நிலையில், தற்போது பிசிசிஐக்கு பதில் அனுப்பியுள்ள ரோஹித் சர்மா, ‘‘என்னால் முதல் டெஸ்டில் பங்கேற்க முடியாது. தனிப்பட்ட காரணங்களால் என்னால் பங்கேற்க முடியாது’’ என ரோஹித் திட்டவட்டமாக அறிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், முதல் டெஸ்டில், ரோஹித்திற்கு மாற்றாக அபிமன்யு ஈஸ்வரன் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.