தோழியை திருமணம் செய்த ஆஸி கிரிக்கெட் வீராங்கனை... ஆவியாக அருகில் இருந்த தந்தை?
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஜெசிக்கா ஜனாசன் தனது தோழியான சாரா வேரனை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஜெசிக்கா ஜனாசன் தனது தோழியான சாரா வேரனை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்யவிருந்த நிலையில், கொரோனா காரணமாக திருமணம் தடைப்பட்டது. பின்னர் ஜெசிக்காவின் தந்தை 2021 ஆம் ஆண்டு புற்றுநோயால் காலமானதால் திருமணம் மீண்டும் தள்ளப்பட்டது.
தனது தந்தை மீது மிகுந்த பிரியம் கொண்டிருந்த ஜெசிக்கா தற்போது வெளியிடுள்ள கருத்து வைரலாகி வருகின்றது.
தமது தந்தைக்கு வண்டு என்றால் மிகவும் பிடிக்கும் என்றும் அவரது ஞாபகமாக வண்டின் உருவத்தை தான் டாட்டூ குத்தியிருந்ததாகவும் தனது திருமணம் நடைபெற்ற போது வண்டு ஒன்று தனது கையில் வந்து அமர்ந்ததாகவும் அந்த வண்டு திருமணம் முடிந்து நான் ஹோட்டலுக்கு செல்லும் வரை கூடவே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தமது தந்தைக்கு வண்டு மிகவும் பிடிக்கும் என்பதால் தனது தந்தையின் ஆவி தான் வண்டு உருவத்தில் என்னுடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தற்போது என்னுடைய தந்தை எப்போதுமே என் கூட இருப்பதாக தாம் உணர்வதாகவும் ஜெசிக்கா கூறியுள்ளார்.