சிஎஸ்கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்... ஏற்பட்டுள்ள சிக்கல்... அந்த போட்டி வரைக்கும் இருப்பாரா?
பங்களாதேஷ் கிரிக்கெட் அமைப்பு முஸ்தபிசூர் ரஹ்மானை ஐபிஎல் தொடரில் இருந்து திரும்பப் பெற தீர்மானித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடம்பெற்றுள்ள முக்கிய வேகப் பந்துவீச்சாளரான பங்களாதேசத்தை சேர்ந்த முஸ்தபிசூர் ரஹ்மான், ஐந்து போட்டிகளில் ஆடி 10 விக்கெட் பெற்று உள்ளார்.
சிஎஸ்கே அணி ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், அந்த நான்கு வெற்றிகளிலும் முஸ்தாபிசூர் ரஹ்மான் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார்.
இந்த நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அமைப்பு முஸ்தபிசூர் ரஹ்மானை ஐபிஎல் தொடரில் இருந்து திரும்பப் பெற தீர்மானித்துள்ளது.
முஸ்தபிசூர் ரஹ்மானை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பங்களாதேஷ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வைக்க இருப்பதாக கூறி பங்களாதேஷ் கிரிக்கெட் அமைப்பு திரும்ப அழைத்துள்ளது.
பங்களாதேஷ் - ஜிம்பாப்வே அணிகள் மோத உள்ள டி20 தொடர் மே 3 துவங்க உள்ள நிலையில் ஏப்ரல் 31 அன்று முஸ்தாபிசூர் ரஹ்மானை திரும்ப அனுப்புமாறு பங்களாதேஷ் கூறி உள்ளது.
மே 1 அன்று நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி வரை அவரை விளையாட அனுமதிக்குமாறு சிஎஸ்கே அணி கோரிய நிலையில், அதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் அமைப்பு சம்மதித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிளே-ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி தகுதி பெற்றால் அப்போது முஸ்தாபிசூர் போன்ற அனுபவ வேகப் பந்துவீச்சாளர் இல்லாமல் சிஎஸ்கே அணிக்கு சிக்கலான நிலை ஏற்படலாம் என பார்க்கப்படுகின்றது.