கோலி, ரோகித் அதிரடி கோரிக்கை... முக்கிய விதியை நீக்கியது பிசிசிஐ!
ஐபிஎல் தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பிசிசிஐ அறிமுகப்படுத்திய இம்பேக்ட் விதிக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
ஐபிஎல் தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பிசிசிஐ அறிமுகப்படுத்திய இம்பேக்ட் விதிக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்த விதியின்படி இன்னிங்க்ஸில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஒரு வீரரை நீக்கி விட்டு அவருக்கு பதில் வேறு வீரரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதன்படி, ஒரு அணி பேட்டிங் செய்யும் போது, ஒரு பேட்ஸ்மேனை பயன்படுத்திவிட்டு பின் பந்து வீசும் போது அவருக்கு பதில் வேறு ஒரு பந்துவீச்சாளரை தேர்வு செய்யும்.
இதனால் ஒவ்வொரு அடியும் மேலதிகமாக ஒரு பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துவிட்டு 200 ரன்களுக்கு மேல் குவித்து வருகின்ற நிலையில், இந்த விதியை நீக்க வேண்டும் என பல அணி நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதுமட்டுமின்றி, இதுகுறித்து விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் பிசிசிஐக்கு கடிதம் எழுதியதாகவும் தகவல் வெளியானதுடன், இம்பேக்ட் விதியின் மூலம் இந்திய அணிக்கு கிடைக்க வேண்டிய ஆல்ரவுண்டர்கள் கிடைக்காமல் போக வாய்ப்பு இருப்பதாக ரோகித் சர்மா கூறி இருக்கிறார்.
ஒரு வீரரின் பந்துவீச்சை பயன்படுத்தும் ஐபிஎல் அணிகள் அவருடைய பேட்டிங்கை பயன்படுத்தாமல் விடுவதால், ஆல் ரவுண்டர்கள் கிடைக்காமல் போக வாய்ப்பு இருப்பதாக ரோகித் சர்மா சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த இம்பாக்ட் விதியானது ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் தொடரும் என்று பிசிசிஐ அறிவித்த நிலையில், அதற்கு முன்பு நடைபெறும் சையது முஸ்தாக் அலி தொடரில் இம்பேக்ட் விதியை பிசிசிஐ ரத்து செய்துள்ளது.
ஐபிஎல் தொடரை விட சையது முஸ்தாக் அலி தொடரில் பல ஆல்ரவுண்டர்கள் உருவாக வாய்ப்பு உள்ளதால், அதில் இம்பாக்ட் விதியை கொண்டு வந்தால் ஆல்ரவுண்டர்களின் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் என்பதால், இந்த விதியை தற்போது பிசிசிஐ அதிரடியாக நீக்கி இருக்கிறது.
அத்துடன், 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இம்பேக்ட் விதி இருக்காது என்றும் கூறப்படுகின்றது.