சாம்பியன்ஸ் டிராபி தொடர்... பிசிசிஐயின் தடையை மீறிய கோலி.. ஆரம்பமே அமர்க்களம்!

பிசிசிஐ விதித்த கட்டுப்பாடுகளை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க துபாய் சென்றுள்ள இந்திய வீரர் விராட் கோலி மீறியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்திய அணியான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தோல்வியைத் தழுவியதை அடுத்து, வெளிநாட்டுத் தொடர்களில் பங்கேற்கச் செல்லும் இந்திய வீரர்களுக்கு பல கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்தது. 

தனிப்பட்ட பணியாளர்களை வீரர்கள் அழைத்துச் செல்லக்கூடாது என்பதும் அந்த கட்டுப்பாடுகளில் ஒன்று.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட துபாய் சென்ற இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சிக்குப் பின் விராட் கோலி மட்டும், பிரபல உணவகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவை வைத்திருந்தார். 

உணவு மற்றும் உடல் கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்தும் கோலி, எப்போதும் தனக்கென தனியாக சமையல் கலைஞரை வைத்திருப்பார்.

அதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், எந்த மாதிரி உணவு வேண்டும் என்பதை அணியில் உள்ளூர் மேலாளரைத் தொடர்பு கொண்டு பிரபல ஹோட்டலில் இருந்து ஆர்டர் செய்துள்ளார். 

இதன்பின்னர், ஹோட்டல் சமையல் கலைஞர்கள் விராட் கோலிக்கு என தனி உணவுகளை சமைத்து அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp