ஐபிஎல்இல் டிஆர்எஸ் நீக்கம்.. ரிவ்யூ கேட்டால் நடப்பது இதுதான்... பிசிசிஐ அதிரடி..
அம்பயர்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக செல்வதாக முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு அமைய டிஆர்எஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2024 ஐபிஎல் தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் (Decision Review System) கிடையாது என பிசிசிஐ அதிரடி தீர்மானம் எடுத்துள்ளதாக செய்தி வந்துள்ளது.
அதற்கு பதிலாக வேறு ஒரு மேம்படுத்தப்பட்ட "ஸ்மார்ட் ரிவ்யூ சிஸ்டம்" (Smart Review System) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என பிசிசிஐ கூறியுள்ளது.
அம்பயர்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக செல்வதாக முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு அமைய டிஆர்எஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.
முன்னதாக, அம்பயர்கள் மட்டுமே டிவி அம்பயரை வீடியோ காட்சிகள் மூலம் தங்கள் முடிவை சரி பார்க்குமாறு கேட்பார்கள். பின்னர்தான் டிஆர்எஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
சிறப்பு கேமராக்கள் மூலம் பேட்ஸ்மேன் நிற்கும் இரண்டு முனைகள் மற்றும் பந்து வீசப்படும் திசை போன்றவற்றை படம் பிடித்து, ஒரு வீரரோ, அம்பயரோ ரிவ்யூ கேட்கும் போது அதை திரையில் ஒளிபரப்புவார்கள்.
டிவி அம்பயர் அதை பார்த்து தனது முடிவை அறிவிப்பார். சிறப்பு கேமராவை இயக்கும் நிறுவனத்தின் நிபுணருக்கும், டிவி அம்பயருகும் இடையே போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இயக்குனர் தொடர்பாக இருப்பார்.
ஆனால், அண்மை காலமாக டிஆர்எஸ் தவறுகள், குழப்பங்கள் மற்றும் கால தாமதங்கள் ஏற்பட்டு வருவதால் இனி இதுவரை இருந்த முறையை மாற்ற பிசிசிஐ முடிவு செய்து இருக்கிறது.
அதன்படி இனி தொலைக்காட்சியை சேர்ந்த யாரும் இடம் பெற மாட்டார்கள் என்றும் டிவி அம்பயர் அமர்ந்து இருக்கும் அதே அறையில் கேமரா நிறுவனத்தின் இரண்டு வல்லுனர்கள் இருப்பார்கள்.
அத்துடன், அம்பயர் என்ன கேட்கிறாரோ அதை அவர்கள் நேரடியாக ஒளிபரப்புவார்கள் என்பதுடன், இனி எட்டு கேமராக்களை பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
எட்டு கேமராக்களில் படம் பிடிக்கப்பட்ட நிகழ்வுகளையும் ஒரே நேரத்தில் திரையில் காணும் வசதியும் இனி கிடைக்கும் என்பதால், டிவி அம்பயர் விரைவாகவும், தெளிவாகவும் தனது முடிவுகளை எடுக்க முடியும்.
எனினும், இந்த தொழில்நுட்பம் குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.