பிசிசிஐ வெளியிட்ட ஒப்பந்த பட்டியல்: பாஜக தயவில் உள்ளே வந்த வீரர்? ரசிகர்கள் விமர்சனம்.. கடும் எதிர்ப்பு!

2024-2025 ஆண்டிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ள நிலையில், ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் இடம்பிடித்துள்ளனர்.

பிசிசிஐ வெளியிட்ட ஒப்பந்த பட்டியல்: பாஜக தயவில் உள்ளே வந்த வீரர்? ரசிகர்கள் விமர்சனம்.. கடும் எதிர்ப்பு!

2024-2025 ஆண்டிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயருக்கு, இம்முறை இடம் வழங்கப்பட்டுள்ளதுடன், இஷான் கிஷனும் இடம்பிடித்துள்ளார்.

ஏ+ பிரிவில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பரீத் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரண்டாவது முக்கிய பிரிவான ஏ பிரிவில் முகமது சிராஜ், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

மூன்றாவது பிரிவான பி பிரிவில் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இடம் பிடித்துள்ளார்கள்.

சி பிரிவில் ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரஷித் கிருஷ்ணா, ராஜத் படிதர், துரூவ் ஜோரல், சர்பரஸ் கான், நிதிஷ் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் உள்ளனர்.

ஏ+ பிரிவில் இடம்பெற்றவர்களுக்கு 7 கோடி ரூபாய், ஏ பிரிவில் இடம்பெற்றவர்களுக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்படும். பி பிரிவுக்கு 3 கோடி ரூபாய், சி பிரிவுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாஜகவில் இணைந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு, ஆண்டு ஒப்பந்த பட்டியலில் ஏ+ பிரிவில் இடம் வழங்கப்பட்டுள்ளது. 

தற்போதைய இந்திய அணியில், ரவீந்திர ஜடேஜாவைவிட அகசர் படேல், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், முகமது ஷமி போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், ஜடேஜாவுக்கு ஏன் ஏ+ பிரிவு வழங்கப்பட்டுள்ளது? இதில் அரசியில் தலையீடு உள்ளதா? என ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி, சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.