முகமது ஷமிக்கு நடந்தது என்ன? உண்மையை வெளியிட்ட பிசிசிஐ மருத்துவக் குழு!

கடந்த நாட்களாக உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் சமி ஈடுபட்ட நிலையில் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் ஷமி தன்னுடைய நூறு சதவீத உடல் நலத்தை எட்டினார். 

முகமது ஷமிக்கு நடந்தது என்ன? உண்மையை வெளியிட்ட பிசிசிஐ மருத்துவக் குழு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில், பந்துவீச்சில் பும்ராவை தவிர வேறு எந்த ஒரு வீரரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில,  2023 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்காமல் இருக்கும், இந்தியாவின் அனுபவ வீரரான முகமது ஷமி எப்போது அணிக்கு திரும்புவார் என ரசிகர்களும் எதிர்பார்த்து உள்ளனர்.

கடந்த நாட்களாக உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் சமி ஈடுபட்ட நிலையில் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் ஷமி தன்னுடைய நூறு சதவீத உடல் நலத்தை எட்டினார். 

ரஞ்சி கோப்பையில் விளையாடிய ஷமி அபாரமாக செயல்பட்டதுடன், பின்னர் சையது முஸ்தாக் அலி தொடரில் விளையாடினார். ஆனாலும், ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படவில்லை. இந்த நிலையில் ஷமி ஆஸ்திரேலியா தொடருக்கு பரிந்துரை செய்யப்பட மாட்டார் என பிசிசிஐ மருத்துவ குழு தெரிவித்துள்ளது. 

பிசிசிஐ மருத்துவ குழு தெரிவிக்கையில், “ஷமி தமது காயத்தில் இருந்து மீண்டு கடந்த நவம்பர் மாதம் ரஞ்சிப் போட்டியில் விளையாடினார். தொடர்ந்து சையது முஸ்தாக் அலி தொடரில் பந்து வீசினார். இதன் மூலம் அவருடைய உடல் தகுதி எப்படி இருக்கிறது என்று நாங்கள் சோதித்து வந்தோம்.

அப்போது ஷமியின் முட்டி பகுதியில் லேசான வீக்கம் இருந்தது. கடந்த ஒரு ஆண்டாக எந்த கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த நிலையில் தற்போது அவருடைய பந்துவீச்சு சுமை அதிகரித்து அவருக்கு முட்டி பகுதியில் வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் முழுமையான உடல் தகுதியை எட்டவில்லை.

இதன் காரணமாக பார்டர் கவாஸ்கர் தொடரில் ஷமி விளையாட மாட்டார். மீண்டும் பெங்களூருவில் அவருக்கு பந்துவீச்சு பயிற்சி அளிக்கப்படும். இதில் அவர் எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறார் என்பதை கண்காணித்து மீண்டும் அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதி அளிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp