ஆஸ்திரேலிய அணியின் திட்டத்தை சுக்குநூறாக்கிய பிசிசிஐ.. அதிரடி ஏற்பாடு!

இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி தழுவிய நிலையில், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய அணியின் திட்டத்தை சுக்குநூறாக்கிய பிசிசிஐ.. அதிரடி ஏற்பாடு!

 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணியானது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் மாதம் 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 

இந்த தொடருக்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதுடன், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகள் தொடரில் இந்திய அணி செல்வதற்கு முன்னதாக பயிற்சி ஆட்டம் நடத்தப்படும். ஆனால் கடந்த முறை இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.

எனினும் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி தழுவிய நிலையில், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் பயிற்சி போட்டி முக்கியம் என்றாலும் அதற்கு தேவையான ஆடுகளத்தையும் வீரர்களையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கடுப்பான பிசிசிஐ, பயிற்சி ஆட்டத்திற்கு நாங்களே எங்களது வீரர்களை அழைத்து வருகிறோம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம்  கூறி இருக்கிறது. 

இதன்படி ருதுராஜ் தலைமையில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற வேண்டும் என போராடும் வீரர்களை வைத்து ஒரு அணியை தயாரிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 

இந்தியா ஏ என பெயரிடப்பட்டு, அந்த அணிக்கும் இந்திய அணிக்கும் நான்கு நாள் நடைபெறும் பயிற்சி போட்டியை ஏற்பாடு செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் இளம் வீரர்களுக்கு கிடைக்கும் என்பதுடன், இந்திய ஏ அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேவைப்படும் போது அணியில் சேர்த்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. 

முதல் போட்டி முடிவடைந்த பிறகு ஆஸ்திரேலிய உள்ளூர் அணிகளுடன் இந்திய அணியை பயிற்சி போட்டிகளில் விளையாட வைக்கலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp