திரை மறைவில் அழுத்தம்... பிசிசிஐயின் தீர்மானத்தால் கொந்தளிக்கும் பாகிஸ்தான்.. நடந்தது என்ன?

இந்திய அணியை, பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என பிசிசிஐ மறைமுகமாக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளது.

திரை மறைவில் அழுத்தம்... பிசிசிஐயின் தீர்மானத்தால் கொந்தளிக்கும் பாகிஸ்தான்.. நடந்தது என்ன?

2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான  ஏற்பாடுகளை  பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு செய்து வரும் நிலையில், இந்திய அணியை, பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என பிசிசிஐ மறைமுகமாக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளது.

இன்னும் எட்டு மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், அதற்கான உத்தேச அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பி உள்ளது. 

இதனையடுத்து,  பாகிஸ்தான் நாட்டில் இந்திய அணி ஆடும் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ ஏற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. 

இந்திய அரசு, இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் அனுப்ப ஒப்புக் கொள்ளாது என்பதால் இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என பிசிசிஐ அழுத்தம் கொடுத்து உள்ளது.

ஒரு வேளை இந்திய அணி, பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இருந்து விலக முடிவு செய்தால், அதனால் அந்த தொடருக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும்.

இதனால், பிசிசிஐயின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்கும் நிலை காணப்படுகின்றது.

தற்போது திரை மறைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகள், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பிடம் இந்திய அணி ஆடும் போட்டிகளை துபாயில் நடத்த திட்டமிட வேண்டும் என கூறி இருக்கின்றனர். 

அதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை சேர்ந்தவர்கள் ஏற்கனவே, பாகிஸ்தானில் நடைபெற வேண்டிய 2023 ஆசிய கோப்பையை பிரித்து இலங்கையில் பாதி போட்டிகளை நடத்தியதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், என்ன நடந்தாலும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும் என கூறி வருகின்றனர்.

மேலும், இந்திய அரசு, இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்பவில்லை என்றால் எழுத்துப்பூர்வமாக அளித்த கடிதத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும். அதன் பின்னரே நாங்கள் இதைப் பற்றி முடிவு செய்வோம். 

குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பாவது இந்திய அணி தங்கள் நிலையை எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அதிகாரி ஒருவர் பேட்டியளித்து இருக்கிறார். 

அதனால் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புகளுக்கு இடையேயான உறவு மேலும் மோசமானதாக மாறி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...