பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கம்? 8 மாதங்களில் ஆப்பு.. கம்பீருக்கு பிசிசிஐ எச்சரிக்கை!
இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அபிஷேக் நாயரை, நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அபிஷேக் நாயரை, நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
நியமிக்கப்பட்ட 8 மாதங்களிலேயே அபிஷேக் நாயரை, நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் மற்றும் ட்ரெய்னர் சோஹம் ஆகியோரையும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரெலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்ததுடன், முன்னதாக, சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியால் தகுதி பெற முடியவில்லை என்றாலும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த சூழ்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தோல்விகளுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், பயிற்சியாளர்கள் குழு மீது நடவடிக்கை எடுக்க பிசிசிஐ தீர்மானித்து உள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் கம்பீர் நியமிக்கப்பட்டதுடன், கம்பீர் தரப்பில் பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்க்கல், துணைப் பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென்டஸ்காட்டே ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
அதேபோல் ஃபீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் தொடர்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியை சந்திப்பதால், பிசிசிஐ நடவடிக்கை எடுக்க உள்ளது.
அதன்படி, துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நீக்கப்பட உள்ளதுடன், 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியின் பயணித்து வரும் நிர்வாகிகளையும் வெளியேற்ற நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் மற்றும் ட்ரெய்னர் சோஹம் ஆகியோரும் நீக்கப்பட உள்ளனர். இதனால் புதிய பயிற்றுவிப்பாளராக ஏட்ரியன் லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவர் தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியுடன் பணியாற்றி வருவதுடன், முன்னதாக கேகேஆர் அணியில் பணியாற்றி இருக்கிறார். ஐபிஎல் தொடருக்கு பின் ஏட்ரியன் லி இந்திய அணியுடன் இணைவார் என்று கூறப்படுகின்றது. பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் தொடர உள்ளார்.
இந்த நிலையில், 8 மாதங்களிலேயே இந்திய துணைப் பயிற்சியாளர்கள் பொறுப்பில் இருந்து அபிஷேக் நாயர் நீக்கப்படவுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இடத்திற்கு யார் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.