இந்திய அணியின் அடுத்த கேப்டன்.. கம்பீர் கைகாட்டிய 31 வயது வீரர்.. பிசிசிஐ வைத்த எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!
இந்திய அணியின், அடுத்த கேப்டனாக அஜித் அகார்கர் பரிந்துரையை புறக்கணித்து கம்பீர் கைகாட்டிய வீரரை பிசிசிஐ தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின், அடுத்த கேப்டனாக அஜித் அகார்கர் பரிந்துரையை புறக்கணித்து கம்பீர் கைகாட்டிய வீரரை பிசிசிஐ தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர், பிப்ரவரி 19ஆம் தேதி முதல் துவங்கவுள்ளதுடன் அடுத்து டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இருக்கிறது. இதில், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றவர்களால் பங்கேற்க முடியாது.
அத்துடன், ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஆகியவை 2027ஆம் ஆண்டில் நடைபெறும் என்பதால், சாம்பியன்ஸ் டிராபி முடிந்தப் பிறகு, இந்திய அணிக்கு புதுக் கேப்டனை நியமிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், ரோஹித்திற்கு பிறகு ஷுப்மன் கில்லுக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக் கேப்டன் பதவியை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக பலரும் கருதினார்கள்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்தப் பிறகு இந்திய ஒருநாள், டி20 அணிகளுக்கு ஒரு கேப்டனையும், டெஸ்ட் அணிக்கு ஒரு கேப்டனையும் நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
சூர்யகுமார் யாதவுக்கு கேப்டன்ஸி அழுத்தம் காரணமாகதான் அவர் பார்ம் அவுட் ஆகிவிட்டதாக கருதப்படுவதால், அவரை கேப்டன் பதவியில் இருந்து தூக்கிவிட்டு இந்திய டி20, ஒருநாள் அணிகளுக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன், சாம்பியன்ஸ் டிராபிக்கு ஹர்திக் பாண்டியாவை தான் துணைக் கேப்டனாக நியமிக்க வேண்டும் என தலைமை பயிற்சியாளர் கம்பீர் விடுத்த கோரிக்கையை கேப்டன் ரோஹித் சர்மா நிராகரித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கம்பீரின் தொடர் கோரிக்கைகள் காரணமாக, சாம்பியன்ஸ் டிராபி முடிந்தப் பிறகு இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ சம்மதம் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன், டெஸ்ட் அணிக்கு பும்ராவை கேப்டனாக நியமிக்கலாமா அல்லது ஷுப்மன் கில்லிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கலாமா என்பது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பும்ராவை டெஸ்டில் மட்டும் பயன்படுத்திவிட்டு, ஐசிசி தொடர்களின்போது மட்டும் டி20, ஒருநாள் பார்மெட்டில் விளையாட வைப்பது குறித்தும், பிசிசிஐ கூட்டத்தில் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.