தமிழக வீரரை அணியில் சேர்த்த பிசிசிஐ.. அதிரடியாக எடுத்த தீர்மானம்!

25 வயதான வாஷிங்டன் சுந்தர் கடைசியாக 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். 

தமிழக வீரரை அணியில் சேர்த்த பிசிசிஐ.. அதிரடியாக எடுத்த தீர்மானம்!

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவிய நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்க உள்ளது. 

இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அணி,  கடந்த 12 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை இழந்ததே கிடையாது. என்ற நிலையில், தற்போது சற்று பின்னடைவை சந்தித்து இருக்கிறது. 

முதல் டெஸ்டில் விளையாடிய இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திருப்திகரமாக இல்லாம நிலையில்,  ரஞ்சி கோப்பையில் அபாரமாக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தரை இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பிசிசிஐ இணைத்து உள்ளது.

ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் 152 ரன்கள் பேட்டிங்கில் விளாசி இருந்தார்,  இந்த நிலையில், அவர் அணியில் இணைவது இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும்.

25 வயதான வாஷிங்டன் சுந்தர் கடைசியாக 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். 

அத்துடன், அண்மையில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்தார். வாஷிங்டன் சுந்தர் இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்று அரை சதம் உள்ளடங்களாக 265 ரன்கள் அடித்துள்ளதுடன்,  ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் கேஎல் ராகுல்? என்ன செய்தார் தெரியுமா?

இந்த சூழலில் சுப்மன் கில்லின் காயம் சரியாகவில்லை என்றால் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெறலாம் அவ்வாறு இல்லையென்றால் கே.எல். ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் விளையாடலாம் என கூறப்படுகின்றது.

அத்துடன், அணியில் சர்பராஸ் கான் தொடர்நது இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp