சைலண்டாக விராட் கோலி, கிறிஸ் கெய்ல் சாதனைக்கு ஆப்பு வைத்து டாப்புக்கு சென்ற பாபர் அசாம்!

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனை பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் படைத்துள்ளார்.

சைலண்டாக விராட் கோலி, கிறிஸ் கெய்ல் சாதனைக்கு ஆப்பு வைத்து டாப்புக்கு சென்ற பாபர் அசாம்!

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனை பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் படைத்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான பாபர் அசாம் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

விராட் கோலி, ஸ்டீஸ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு நிகரான வீரராக பாகிஸ்தான் ரசிகர்களால் பாபர் அசாம் கொண்டாடப்பட்டு வருகிறார்.

பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன், சர்வதேச டி20 கிரிக்கெட் மற்றும் லீக் போட்டிகளிலும் பாபர் அசாமின் ஆட்டம் மிரட்டலாக அமைந்துள்ளது. 

பிஎஸ்எல் , எல்பிஎல், சிபிஎல், பிபிஎல் என்று 4 வகையான லீக் போட்டிகளில் விளையாடி வரும் பாபர் அசாம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

இதுவரை 271 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பாபர் அசாம் 84 அரைசதம், 10 சதங்கள் உட்பட 10,066 ரன்களை குவித்துள்ளார்.

முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 285 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது.

விராட் கோலி 299 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்து இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 3ஆவது இடத்தில் இருக்கிறார். 

ஆஸ்திரேலியா ஜாம்பவான் டேவிட் வார்னர் 303 இன்னிங்ஸ்களிலும், ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் டேவிட் ஃபின்ச் 327 இன்னிங்ஸ்களிலும், ஜாஸ் பட்லர் 350 இன்னிங்ஸ்களிலும் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.

பாபர் அசாம் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை குவித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp