அதுக்கு காரணமே இதுதான்.. மன அழுத்தத்தில் பாபர் அசாம்... முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் அதிரடி
பாபர் அசாமுக்கு நிறைய மனநல பிரச்சனைகள் வந்து விட்டதாகவும், பாபர் அசாம் வலுக்கட்டாயமாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
கடந்த ஓராண்டாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் பேட்டிங்கில் தடுமாற்றம் காணப்படுகின்றது. அதனால், பாபர் அசாம் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.
ஆனால், அவருக்கு மனதில் தான் பிரச்சனை என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரசீத் லத்தீப் கூறி இருக்கிறார். 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி மோசமாக செயல்பட்டதால் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டார்.
எனினும், சில மாதங்களில் அவர் பாகிஸ்தான் ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியின் கேப்டனாக மீண்டும் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவரை நீக்கிவிட்டு மீண்டும் கேப்டன் ஆக்கியது தான் அவருக்கு பிரச்சனையாக மாறி உள்ளது என ரஷீத் லத்தீப் கூறி இருக்கிறார்.
பாபர் அசாமுக்கு நிறைய மனநல பிரச்சனைகள் வந்து விட்டதாகவும், பாபர் அசாம் வலுக்கட்டாயமாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
“மனது சரியாக வேலை செய்யவில்லை என்றால் நரம்பு மண்டலம் சரியாக வேலை செய்யாது என்ற நிலையில், அவர் ஒவ்வொரு பந்தையும் வேகமாக அடிக்க முயல்கிறார்." என ரஷீத் சுட்டிக்காட்டி உள்ளார்.
அத்துடன், கேப்டன் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு தன் மீது கவனம் செலுத்தி மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவரது பேட்டிங் பிரச்சனைக்கு மனநலம் சார்ந்த அழுத்தமே காரணம் என தான் நினைப்பதாக ரஷீத் லத்தீப் கூறியிருக்கிறார்.