ரோகித் சர்மா எடுத்த மோசமான முடிவு.. ஒரே தவறால் இந்திய அணிக்கு பின்னடைவு.. நடந்தது என்ன?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக டாஸ் கூட வீசப்பட முடியவில்லை. இதனால் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் முற்றிலும் கைவிடப்பட்டது.

ரோகித் சர்மா எடுத்த மோசமான முடிவு.. ஒரே தவறால் இந்திய அணிக்கு பின்னடைவு.. நடந்தது என்ன?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக டாஸ் கூட வீசப்பட முடியவில்லை. இதனால் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் முற்றிலும் கைவிடப்பட்டது.

இதை அடுத்து இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பெங்களூரு வானிலை மேகமூட்டத்துடன் குளிர்ந்த நிலையில் காணப்பட்ட நிலையில்,  இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

ஆடுகளமும் ஈரப்பதத்துடன் இருந்த நிலையில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமான விஷயம் என்பதால், இந்திய அணி டாஸ் வென்றால் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்யும் என்று கணிக்கப்பட்டது. 

ஆனால் ரோகித் சர்மா டாஸ் வென்றவுடன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனால் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. 

வெறும் 10 ரன்களுக்கு இந்தியா மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியதுடன், இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்திருந்தால் நியூசிலாந்து அணியின் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தி முன்னிலையில் இருந்திருக்கலாம்.

இந்த நிலையில்,  வெறும் 46 ஓட்டங்கள் என்ற குறைந்த ஸ்கோரில் இந்திய அணி ஆட்டம் இழந்துள்ளதால், அது நியூசிலாந்து அணியின் வெற்றியை பிரகாசமாக்கிவிட்டுள்ளது.

பெங்களூர் ஆடுகளத்தில் கடைசி நாளில் பேட்டிங் செய்வது கடினம் என்பதால் ரோகித் சர்மா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதால் இந்த சூழலில் பேட்டிங் செய்து பழக ரோகித் சர்மா இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இருந்தாலும், ரோஹித் எடுத்த முடிவு தவறாக போய்விட்டது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp