கோபமாக பேசியதால் வந்த வினை... ரோஹித் சர்மாவுக்கு தடை?  சிக்கலில் பிசிசிஐ!

2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடந்த பிட்ச் அதில் நான்காவது மதிப்பீடான சராசரிக்கும் குறைவான தரத்தை பெற்று இருந்தது. அது குறித்தும் ரோஹித் சர்மா பேசி இருந்தார்

கோபமாக பேசியதால் வந்த வினை... ரோஹித் சர்மாவுக்கு தடை?  சிக்கலில் பிசிசிஐ!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) குறித்து தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் முடிவில் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் விமர்சனம் செய்து கோபமாக பேசி இருந்தார். 

இந்த நிலையில், ஐசிசி விதிப்படி ரோஹித் சர்மா மீது நடவடிக்கை எடுக்கப்படாலம் என்றும் அது பற்றி ஐசிசி இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் நடைபெற்ற செஞ்சுரியன் மற்றும் கேப் டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ்  மைதானத்தின் பிட்ச் சரியில்லை எனவும், அதனால் தான் போட்டி விரைவாக முடிந்து விட்டதாக விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில், இரண்டாவது போட்டி முடிந்த உடன் செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா அந்த பிட்ச் குறித்து பிரச்சனை இல்லை எனக் கூறியதோடு, பிட்ச்களுக்கு ஐசிசி அளிக்கும் மதிப்பீடு குறித்து பேசினார். 

2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடந்த பிட்ச் அதில் நான்காவது மதிப்பீடான சராசரிக்கும் குறைவான தரத்தை பெற்று இருந்தது. அது குறித்தும் ரோஹித் சர்மா பேசி இருந்தார்

அத்துடன், கேப் டவுன் போன்ற பிட்ச்களில் ஆடுவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அதே போல இந்தியாவில் முதல் நாளே பந்து ஸ்பின் ஆனால் பிட்ச் குறித்து யாரும் பேசக் கூடாது என்றும் அவர் கூறினார்.

அப்போது அனைவரும் வாயை மூடிக் கொண்டால் தனக்கு இந்த பிட்ச் குறித்தும் எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

மேலும், ஐசிசி மற்றும் மேட்ச் ரெப்ரீக்கள் எப்படி பிட்ச்களுக்கு ரேட்டிங் கொடுக்கிறார்கள் என்பதை நிறைய பார்த்து விட்டேன் எனறும் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு கொடுத்த மதிப்பீட்டை ஒப்புக் கொள்ளவே முடியாது எனவும் ரோஹித் தெரிவித்தார்.

இளம் வீரர் முதுகில் குத்திய பிசிசிஐ.. பெரும் அநியாயம்.. ரசிகர்கள் குமுறல்!

ரோஹித் சர்மாவின் பேச்சு நேரடியாக ஐசிசி மற்றும் அதன் அதிகாரிகளை விமர்சனம் செய்யும் வகையில் இருந்ததால் அவர் மீது மேட்ச் ரெப்ரீ புகார் அளித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

அதன்படி அவருக்கு ஒழுங்கீன புள்ளிகள் வழங்கப்படுவதுடன், குறிப்பிட்ட காலத்தில் ஒரு வீரர் அதிக புள்ளிகளை பெற்றால் அவருக்கு சில போட்டிகளில் ஆட தடையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, ரோஹித் சர்மா சிக்கலில் இருப்பதாக கூறப்படுவதுடன்,  ஐசிசி அமைப்பில் அதிக செல்வாக்கு கொண்டதாக பிசிசிஐ இருப்பதால் ரோஹித் சர்மா விவகாரம் அப்படியே முடங்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp