கமாலா ஹாரிஸுக்கு பராக் ஒபாமாவின் ஆதரவு
ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ் என தெரிவித்த ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்கா கலமா ஹாரிஸ் தலைமையில் புதிய அத்தியாயத்திற்கு தயாராக உள்ளதென, சிகாகோ நகரத்தில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான நிலையில், அங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ் என தெரிவித்த ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என்றும் கூறியுள்ளார்.
கமலா ஹாரிஸுக்கு அமெரிக்கா வாய்ப்பளித்துள்ளது. அவர் தன் வாழ்நாள் முழுவதும் அமெரிக்கா கொடுத்த வாய்ப்புகளை மீண்டும் நாட்டுக்கு வழங்க அர்ப்பணித்துள்ளார். அதனால் நான் கமலாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.