பேட்டிங் வரிசையில் மாற்றம்.. இந்திய அணி தீவிர பயிற்சி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி புதன்கிழமை ஆரம்பிக்கவுள்ளது.

பேட்டிங் வரிசையில் மாற்றம்.. இந்திய அணி தீவிர பயிற்சி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி புதன்கிழமை ஆரம்பிக்கவுள்ளதுடன், சூரிய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அக்சர் பட்டேல் துணை கேப்டனாக உள்ளார்.

இந்த நிலையில், கொல்கத்தாவுக்கு வந்துள்ள இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்க ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அக்சர் பட்டேல், இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்து பேசி உள்ளார்.

“பேட்டிங் வரிசையை பொருத்தவரை அணியில் மூன்றாவது இடத்தில் இருந்து ஏழாவது வீரர்கள் வரை எந்த நேரத்திலும் பேட்டிங் செய்ய கூடும். போட்டியில் எந்த சூழல் ஏற்படுகிறதோ அதற்கு ஏற்றது போல் நாங்கள் எங்களுடைய பேட்டிங் வரிசையை மாற்றி அமைப்போம்.

எந்த பவுலர்களுக்கு எதிராக எந்த பேட்ஸ்மேன் களத்துக்கு வந்தால் சரியாக இருக்கும் என்பதை வைத்து முடிவு செய்வோம். இது எனக்கு மட்டுமல்ல நடுவரிசையில் விளையாடும் அனைத்து வீரர்களுக்குமே பொருந்தும். 

துடுப்பாட்ட வீரர்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து தான் டி20 போட்டியில் அணியில் வெற்றி இருக்கிறது. அணியில் பெரிய நெருக்கடியும் இல்லை. 

கேப்டன் பதவியில் இருக்கும் நபர்கள் சில சமயம் சில கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும். அது குறித்து நாங்கள் அணியிடம் பேசி சக வீரர்களின் நம்பிக்கையை பெற முயற்சி செய்வோம். 

டி 20 போட்டி என்பது விறுவிறுப்பாக நடைபெறும் என்பதால், முடிவுகளையும் விரைவாக எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை வருகிறது. அதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். 

 டி20 மட்டுமல்ல அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அணி தற்போது மாற்றத்தை சந்தித்து வருகிறது. எந்த வீரர்களை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கேப்டனும் தேர்வுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும்” என்று அக்சர் பட்டேல் குறிப்பிட்டு உள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp