அவ்ளோ கஷ்டப்பட்ட அந்த பொண்ணா எலிமினேட்... அட பிக் பாஸே!

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் எப்படியும் எலிமினேட் இருக்காது என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், விட்டா நாங்க டபுள் எலிமினேஷனே செஞ்சு டிஆர்பியை எகிற விடுவோம் என்கிற ரேஞ்சுக்கு பிக் பாஸ் டீம் சும்மா ஃபயரா இருக்கு..

அவ்ளோ கஷ்டப்பட்ட அந்த பொண்ணா எலிமினேட்... அட பிக் பாஸே!

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் எப்படியும் எலிமினேட் இருக்காது என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், விட்டா நாங்க டபுள் எலிமினேஷனே செஞ்சு டிஆர்பியை எகிற விடுவோம் என்கிற ரேஞ்சுக்கு பிக் பாஸ் டீம் சும்மா ஃபயரா இருக்கு..

எப்படியும் வயதான போட்டியாளர்களான பவா செல்லதுரை மற்றும் யுகேந்திரன் வாசுதேவன் நாமினேட் ஆன நிலையில், பூவா தலையா என ரசிகர்கள் டாஸ் போட்டே பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

ஆனால், கடைசியில் இளம் பெண் போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் வாரத்தில் எலிமினேட் ஆகியுள்ளார் என்பது தான் இளைஞர்களை வருத்தமடைய செய்துள்ளது.

யுகேந்திரன் கிரேட் எஸ்கேப்

பிக் பாஸ் ஓட்டிங்கை விட தனியார் கருத்துக் கணிப்பு கச்சிதமாக இருப்பது பெரும் ஆச்சர்யமாக உள்ளது. கடந்த சீசன்களை போல இந்த சீசனிலும் கருத்துக் கணிப்பில் இடம் பெற்ற அந்த போட்டியாளரே முதல் பலியாடு என தெரிகிறது. கடைசி வரை கடைசி இடத்தில் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த யுகேந்திரன் வாசுதேவன் சற்றே கூடுதல் ஓட்டுக்கள் பெற்று இந்த வாரம் சேஃப் ஆகி விட்டார்.

டாட்டூ போட்ட பாப்பா எலிமினேட்

பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் அனன்யா ராவ் யாரென ரசிகர்கள் தெரிந்து கொள்வதற்கு முன்னதாகவே அந்த இடுப்புக்கு கீழ் டாட்டூ போட்ட பாப்பா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே எலிமினேட் ஆகி விட்டதாக அதிரடி தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே அவர் தான் வெளியேறப் போகிறார் என எதிர்பார்த்த நிலையில், அவரே வெளியேறி உள்ளார் என உறுதியான தகவல்கள் ஷூட்டிங் முடிந்த நிலையில், லீக் ஆகி உள்ளது.

அவ்ளோ வேலை செஞ்ச அனன்யா

அனன்யா ராவ் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்ற நிலையில், டாஸ்க்கில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு ஃப்ளோர் க்ளீனிங்கில் இருந்து பல வேலைகளை செய்து கொண்டிருந்த அனன்யா அதிரடியாக முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டுள்ளது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp