இலங்கை அணியை பிரித்து மேய்ந்த  அதிரடி ஜோடி.. வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் துவக்க வீரர்கள் பதும் நிசங்கா 11 ரன்களும், குசால் மென்டிஸ் 19 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 

இலங்கை அணியை பிரித்து மேய்ந்த  அதிரடி ஜோடி.. வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி

இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பிரான்டன் கிங் மற்றும் ஈவின் லீவிஸ் ஆடிய அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி தடுமாறியது.

வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் துவக்க வீரர்கள் பதும் நிசங்கா 11 ரன்களும், குசால் மென்டிஸ் 19 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 

மூன்றாம் வரிசையில் இறங்கிய குசால் பெரேரா 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். கமிந்து மென்டிஸ் மற்றும் கேப்டன் அசலங்கா இணைந்து அபாரமாக ரன் சேர்த்தனர். 

கமிந்து மென்டிஸ் 40 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். அசலங்கா 35 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அதன் பின் பானுகா 11 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் விக்கெட்கள் சரிந்தாலும் பின்வரிசை வீரர்கள் ஓரளவு ரன் சேர்த்தனர்.

இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர்கள் இலங்கை அணியை துவம்சம் செய்தனர். 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர்கள் பிரான்டன் கிங் 33 பந்துகளில் 63 ரன்களும், ஈவின் லீவிஸ் 28 பந்துகளில் 50 ரன்களும் சேர்த்தனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்தனர். 

9.1 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் விக்கெட்டை இழந்து இருந்தது. அப்போது வெற்றிக்கு 65 பந்துகளில் 73 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இருந்தது அந்த அணி. அதன் பின் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நிதானமாக ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இடையே விக்கெட்கள் வீழ்ந்த போதும் நிதானமாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவரில் 180 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி கொடுத்தமையே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp