ஐசிசி தரவரிசை.. முன்னேறிய கோலி, ஜெய்ஸ்வால்.. பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் பின்னடைவு!

பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 3ஆவது இடத்தில் இருந்து சரிந்து 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

ஐசிசி தரவரிசை.. முன்னேறிய கோலி, ஜெய்ஸ்வால்.. பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் பின்னடைவு!

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இருவரும் முன்னேற்றம் அடைந்ததுள்ளனர்.

அத்துடன், பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 3ஆவது இடத்தில் இருந்து சரிந்து 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அந்த அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகியும், 2வது இன்னிங்ஸில் 22 ரன்களும் எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெவிலியன் திரும்பினார். 

இந்த நிலையில் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் வெளியாகியுள்ளது. வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், பாபர் அசாம் 6 இடங்கள் சரிந்துள்ளார்.

நம்பர் 3ல் இருந்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 6 இடங்கள் சரிந்து 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

அதேபோல் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் ரிஸ்வான், ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்ததன் காரணமாக 17வது இடத்தில் இருந்து 7 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை பிடித்துள்ளார்.

வங்கதேசம் அணியின் சீனியர் வீரரான முஷ்ஃபிகுர் ரஹிம் 7 இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பிடித்துள்ளார். 

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளதுடன், நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 2வது இடத்திலும், டேரல் மிட்சல் 3வது இடத்திலும் உள்ளனர்.

இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி ப்ரூக் 3 இடங்கள் முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளார். 5வது இடத்தில் ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் 6வது இடத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் இருக்கின்றனர். 

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 8வது இடத்திற்கு வந்துள்ளதுடன், சுப்மன் கில் 18வது இடத்தில் தொடர்கிறார். 

பந்துவீச்சு தரவரிசையை பொறுத்தவரை இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்திலும், 2வது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா மற்றும் ஆஸ்திரேலியா வீரர் ஜோஷ் ஹேசல்வுட் இருவரும் உள்ளனர். 

4வது இடத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடா இருவரும் உள்ளதுடன், 6வது இடத்தில் நேதன் லயனும், 7வது இடத்தில் ஜடேஜாவும் உள்ளார். 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp