கபில் தேவ் சாதனையை முறியடித்த பும்ரா: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு!

சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது இந்திய வேகப்பந்துவீச்சாளராகவும் புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

கபில் தேவ் சாதனையை முறியடித்த பும்ரா: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு!

சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்தார். 

இதன் மூலம் கபில் தேவ் வசமிருந்த 70 இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா முறியடித்தார்.

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் 376 ரன்களை குவித்ததைத் தொடர்ந்து, வங்கதேச அணி வெறும் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இந்தப் போட்டியில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரளவைத்தார்.

அத்துடன், சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது இந்திய வேகப்பந்துவீச்சாளராகவும் புதிய சாதனையையும் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 70 இன்னிங்ஸ்களுக்கு பின்னர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற கபில் தேவ் சாதனையை முறியடித்து, பும்ரா 163 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

70 இன்னிங்ஸ்களில் கபில் தேவ் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 3வது இடத்தில் ஜவஹல் ஸ்ரீநாத் 147 விக்கெட்டுகளுடன் உள்ளார், தொடர்ந்து முகமது ஷமி 130 விக்கெட்டுகளுடன் 4வது இடத்திலும், இஷாந்த் சர்மா 127 விக்கெட்டுகளுடன் 5வது இடத்தில் உள்ளனர்.

பும்ராவின் இந்த சாதனையானது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக்கோப்பையின் பின்னர் 82 நாட்கள் ஓய்வெடுத்த பும்ரா, நேரடியாக இந்த டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய நிலையில், மிகச்சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தி உள்ளார்.

இதனால், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பும்ரா பூரணமாக தயாராக இருப்பதையும் இது உறுதிப்படுத்துகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...