இறுதி டெஸ்டில் அணிக்கு திரும்பும் பும்ரா? இந்த வீரரருக்கு தான் ஆப்பு... ரோகித் அதிரடி தீர்மானம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடிக்க விளையாடும் அனைத்து போட்டிகளுமே வெற்றி பெற வேண்டும். என்பதால் இந்திய அணிக்கு இந்த போட்டி முக்கியமானது.

இறுதி டெஸ்டில் அணிக்கு திரும்பும் பும்ரா? இந்த வீரரருக்கு தான் ஆப்பு... ரோகித் அதிரடி தீர்மானம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை  இந்திய அணி ஏற்கனவே வென்ற நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் திகதி தர்மசாலாவில் நடைபெறுகிறது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடிக்க விளையாடும் அனைத்து போட்டிகளுமே வெற்றி பெற வேண்டும். என்பதால் இந்திய அணிக்கு இந்த போட்டி முக்கியமானது.

இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில்பும்ராவுக்கு ஓய்வு தரப்பட்ட நிலையில்,  தொடரை இந்தியா வென்ற நிலையில் பும்ரா அணிக்கு திரும்புவாரா என்று கேள்வி எழுந்தது.

கேப்டன் ரோகித் சர்மா ஐந்தாவது டெஸ்டையும் அவர் முக்கியமானது போட்டியாக  நினைக்கும் நிலையில், இது குறித்துபேசும் போது தொடரை வென்றால் கூட ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் விளையாடுவோம் என்று கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

மதிக்காத இந்த இரண்டு இந்திய வீரர்களுக்கு இனி வாய்ப்பே கொடுக்க மாட்டோம்... ரோஹித் அதிரடி

இதனால் ஐந்தாவது டெஸ்டில் பும்ரா நிச்சயம் அணிக்கு திரும்ப வேண்டும் என்று பிசிசிஐ தேர்வு குழுவிடம் ரோகித் சர்மா கூறியுள்ளாராம். இதன் காரணமாக பும்ரா ஐந்தாவது டெஸ்டில் விளையாடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. 

மார்ச் மூன்றாம் தேதி தர்மசாலாவில் இந்திய அணியின் பயிற்சி முகாம் தொடங்குகிறது இதில் பும்ரா நிச்சயம் பங்கேற்பார் என தெரிகிறது. 

முகமது சிராஜ் ஏற்கனவே தன்னுடைய திறமையை நிரூபித்தாலும், ராஞ்சி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும் கடைசி இன்னிங்சில் அவர் மூன்று ஓவர் மட்டுமே வீசி 16 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

இந்த நிலையில் அறிமுக வீரராக செயல்பட்ட ஆகாஷ் தீப் மூன்று முக்கிய விக்கெட்டுகளை முதல் இன்னிங்சில் வீழ்த்தினார். எனினும் அவருடைய ஓவரிலும் ரன்கள் கசிந்தது. 

இதனால் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற குழப்பம் இருந்த நிலையில் சிராஜிக்கு மீண்டும் ஓய்வு அளித்துவிட்டு பும்ராவுடன் ஆகாஷ் தீப்பை இணைந்து கடைசி டெஸ்டில் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...