ஓய்வு கொடுக்க முடியாது.. ரோஹித் முடிவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. பிசிசிஐ அதிரடி!

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணி விளையாடிய இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 

ஓய்வு கொடுக்க முடியாது.. ரோஹித் முடிவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. பிசிசிஐ அதிரடி!

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணி விளையாடிய இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 

தற்போது இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஓய்வில் இருக்கும் சூழலில், அடுத்ததாக வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், 27ஆம் தேதி கான்பூர் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், குறித்த டெஸ்ட் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு வழங்க முன்னதாக எடுத்த முடிவை தற்போது தேர்வுக் குழு மாற்றியுள்ளது.

அதன்படி வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் பும்ராவை களமிறக்கி, 2வது டெஸ்ட் போட்டிக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடருக்கு இடையில் வெறும் 3 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளதால், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் பும்ராவை விளையாட வைத்துவிட்டு, ஒரு போட்டியில் ஓய்வளிக்கலாம் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து,பும்ரா இல்லாத போட்டிகளில் முகமது ஷமி மற்றும் சிராஜ் முதன்மை வேகப்பந்துவீச்சாளர்களாக செயல்பட அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், சொந்த மண்ணில் நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் கூட அனுபவ வீரர்கள் தேவை. அதனால் அனைவருக்கும் ஓய்வு அளிக்க முடியாது. சீனியர் வீரருடன் இணைந்து இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

துலீப் டிராபியில் சிறப்பாக விளையாடக் கூடிய வேகப்பந்துவீச்சாளர்ளும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துக்கு தேர்வு செய்யப்படுவதுடன், ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக சொந்த மண்ணில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp