தவறு மேல் தவறு... சென்னை அணியின் தோல்விக்கு என்ன காரணம்?
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எட்டு போட்டியில் விளையாடி ஆறு தோல்வி, இரண்டு வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எட்டு போட்டியில் விளையாடி ஆறு தோல்வி, இரண்டு வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெறும் 176 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 15 புள்ளி நான்கு ஓவரில்மும்பை அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி பல்வேறு தவறுகளை செய்துள்ளது. இந்த தொடரில் பெரிய அளவு சாதிக்கவில்லை என்றாலும் தொடக்க வீரராக ரச்சின் ரவீந்திராவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் ரன்கள் அடித்ததை தவிர அவர் அடுத்த போட்டிகளில் பிரகாசிக்கவில்லை.
இதனால் ரச்சின் ரவீந்திராவை அணியை விட்டு நீக்க வேண்டும். தொடக்க வீரர்கள் கிரிக்கெட் டெக்ஸ்ட் புக் ஷாட்களை மட்டும் தான் ஆட வேண்டும் என்ற அறிவுறுத்தலை தோனி வழங்கி உள்ளார்.
இதனால் தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது போல் சிஎஸ்கே வீரர்கள் ரன் சேர்க்க தடுமாறுகிறார்கள். டி20 போட்டிகளில் எடுத்த உடனே ரன்கள் சேர்த்தால் தான் பவர் பிளேவில் அதிக ரன்கள் பெற முடியும்.
இதனால் சிஎஸ்கே அணி தங்களுடைய பேட்டிங் ஸ்டைலை முற்றிலும் மாற்ற வேண்டும் என்பதுடன், சிஎஸ்கே அணியில் இந்த ஆட்டத்தில் வான்ஸ் பேடி என்ற இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும்.
17 வயது வீரர் ஆயுஷ் மாத்ரே சிறப்பாக செயற்பட்ட நிலையில், அதேபோல் வான்ஸ் பேடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால், தன்னுடைய திறமையை நிரூபித்து இருப்பார்.
இதனால் ரச்சின் ரவீந்திராவுக்கு பதில் வான்ஸ் பேடியை சேர்த்து இருப்பதுடன், நடுவரிசையில் டிவால்ட் பிரேவீசை சிஎஸ்கே அணி பயன்படுத்திருக்க வேண்டும். ஏனென்றால் பிரவீஸ் மும்பை ஆடுகளத்தில் விளையாடிய அனுபவம் இருக்கிறது.
இந்த நிலையில் முதல் போட்டியிலே பிரவீசை பயன்படுத்தி இருந்தால் சிஎஸ்கே அணி நடுவரிசையில் அதிக ரன்களை சேர்த்து இருக்கும். ஆட்டத்தில் ஜடேஜா சிவம் துபே ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தாலும், நடு ஓவர்களில் டெஸ்ட் போட்டி போல் மாற்றி விட்டார்கள்.
இதேபோன்று சிஎஸ்கே அணி இளம் வீரர் அன்சூல் காம்போஜை பிளையிங் லெவனில் சேர்க்கவில்லை. அன்சூல் காம்போஜ் நன்றாக பந்து வீசக்கூடியவர். பேட்டிங்கிலும் நன்றாக ஆடக்கூடியவர்.
அத்துடன், விஜய் சங்கர் பேட்டிங்கும் செய்யவில்லை பந்துவீச்சும் செய்யவில்லை. இதனால் அவரை நீக்கிவிட்டு அன்சூல் காம்போஜை சேர்த்து இருக்க வேண்டும். இப்படி பல தவறுகளை சிஎஸ்கே அணி செய்ததால் தான் மும்பை அணியிடம் தோல்வியை தழுவியதாக பார்க்கப்படுகின்றது.