பொட்டு வெச்ச தங்கக்குடம்... தோனிக்கு ஃபினிஷிங் வாய்ப்பு கொடுக்காதது ஏன்? ரசிகர்கள் ஏமாற்றம்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி, மும்பை அணியை தோற்கடித்தது. 

பொட்டு வெச்ச தங்கக்குடம்... தோனிக்கு ஃபினிஷிங் வாய்ப்பு கொடுக்காதது ஏன்? ரசிகர்கள் ஏமாற்றம்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி, மும்பை அணியை தோற்கடித்தது. 

முதலில் விளையாடிய மும்பை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு ரச்சின் ரவீந்திரா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.

எதிர்புறம் ராகுல் திரிபாதி 2 ரன்னில் அவுட்டாக, கேப்டன் ருதுராஜ் அதிரடியாக விளையாடி 53 ரன்கள் குவித்த நிலையில், அடுத்ததாக வந்த சிவம் துபே, தீபக் ஹூடா, சாம் கரண் ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 17 ரன்கள் எடுத்து ரன் அவுட்டான நிலையில், தோனி பேட்டிங் செய்ய வந்தபோது, “நீ பொட்டு வச்ச தங்கக்குடம்” பாடல் ஒலிக்கவிடப்பட்டது. அமோக வரவேற்புக்கு மத்தியில் களமிறங்கிய தோனி 19ஆவது ஓவரின் கடைசி 2 பந்தில் ரன்கள் எடுக்கவில்லை.

இருந்தாலும், அடுத்த ஓவரில் அவர் நான்கு அல்லது ஆறு ஓட்டங்களுடன் போட்டியை முடிப்பார் என, ஃரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மறுபுறம் விளையாடிய ரவீந்தரா 20ஆவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி ஆட்டத்தை ஃபினிஷிங் செய்தார்.

இதானால், சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஏன் என்றால் வருடத்திற்கு ஒருமுறை விளையாடும் தோனி, ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பைப் பார்ப்பது ரசிகர்களுக்கு அரிய வாய்ப்பாகவே காணப்படுகின்றது.

இந்த நிலையில், தோனிக்கு ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பை கொடுக்காதது பற்றி பேசிய ரவீந்திரா, அணிக்காக வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதில் முழு கவனத்துடன் இருந்தாகவும், தோனியுடன் முதல் முறையாக களத்தை பகிர்ந்து கொண்டது சிறப்பானது என்றும் கூறியுள்ளார்.

ஜாம்பவான் தோனி போட்டியை ஃபினிஷிங் செய்வதை பார்க்கவே ரசிகர்கள் விரும்பினார்கள் என்பது தெரியும். ஆனால் போட்டியை வெற்றிக்கொள்ளவமு முக்கியம்.  தோனி ஏற்கனவே நிறைய போட்டிகளை ஃபினிஷிங் செய்துள்ளார். அவர் ஃபினிஷ் செய்ய இன்னும் நிறைய போட்டிகள் வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.