சிஎஸ்கேவில் தோனி விளையாடுவது உறுதி.. சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்!
சிஎஸ்கே அணியில் 43 வயதான தோனி வெறும் விக்கெட் கீப்பராக மட்டும் செயற்பட்டு வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
சிஎஸ்கே அணியில் 43 வயதான தோனி வெறும் விக்கெட் கீப்பராக மட்டும் செயற்பட்டு வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
முன்னதாக தமது ஊதியத்தை குறைத்துக் கொண்டு மற்ற வீரர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் படி தோனி கூறியிருந்த நிலையில், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை இருந்த ஒரு விதியை மீண்டும் கொண்டு வர சிஎஸ்கே அணி வலியுறுத்தி வந்தது.
அதாவது, தோனிக்கு குறைந்த சம்பளம் வழங்க வேண்டும் என்றால் அவர் இந்திய அணிக்காக விளையாடாத வீரராக இருக்க வேண்டும்.
அதாவது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரர்களை இந்திய அணிக்காக விளையாடாத வீரராக கருதப்படலாம் என்பதாகும்.
அதற்கு பல அணிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த விதி நடைமுறைக்கு வந்தால் தோனிக்கு வெறும் 4 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணியால் ஏலத்திற்கு முன்பே தக்க வைக்க முடியும்.
இதன் மூலம் சிஎஸ்கே அணியின் கையிருப்பு தொகை பெரிய அளவில் இருக்கும் என்பதால், இதை பயன்படுத்தி சிஎஸ்கே தாங்கள் நினைக்கும் வீரர்களை வாங்கலாம்.
எனினும் தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நிலையில், 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வந்தால் தான் அவர் ஐந்து ஆண்டு நிறைவு செய்வார்.
இதன் மூலம் தோனி இந்த விதிக்குள் வருவாரா இல்லையா என்பதற்கு பிசிசிஐ தான் விளக்கமளிக்கவேண்டும்.
அது மட்டும் இன்றி, தோனி குறைந்த ஊதியத்தில் சிஎஸ்கே அணிக்காக மேலும் மூன்று ஆண்டுகள் விளையாட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
அத்துடன், தன்னுடைய உடல் தகுதியை பழைய படி கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் தோனி எடுத்து வருகிறார் என்ற தகவல் சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளது.